இறந்தபின் வாழ்கிறேன்

கண்ணடைத்து துயில்கொண்டேன்
கனவினில் வந்துநின்றாள்
கண்ணீரின் வடுக்கள் அவள்
கன்னத்தில் நானும் கண்டேன்

வசந்தம் வீசிய என் வாலிப பருவத்தில்
சுகந்தம் வீசும் நறுஞ்சோலையின் மலராக
உடல் மறைத்த கருப்பு அங்கிக்குள்
கடல் அளவு ஆழம் நிறை கண்கள் காட்டி

தோழிமார் சூழ உந்தன் பூமுகம் கண்ட அன்று
ஆழிப் Buy Amoxil பேரலையொன்று அடித்ததடி என்நெஞ்சில்
ஆடி நடம் புரியும் உன் மை விழிப் பார்வை வீசி
ஓடி வந்தமர்ந்தாய் ஒய்யாரமாய் என்னுள்ளே

அத்தருணம் நானும் அங்கு அத்தனையும் மறந்தேனடி
அழகாக என்னை நானும் அன்று தான் உணர்ந்தேனடி
நிழல் போல நானும் உன்னை சுற்றித் திரிந்த நாளில்
சுழலொன்று வந்து என்னைச் சுழற்றிப் போட்டதடி

மணவாளன் நானும் வந்து மலையிடுவேனென்றெண்ணி
மாசறு பொன்னே நீயும் வாசலில் காத்து நின்றாய்
காசையும் பொன்னையும் காட்டி கை கழுவச் சொன்னாரடி
நீசர்கள் முன் நம் நேசம் நிராசையாய்ப் போச்சுதடி

குன்று போல் வளர்த்த காதல் பொடிப்பொடியான போது
அன்று நான் அழுத கண்ணீர் ஆழ்கடல் தோற்றுவிடும்
சூழ்நிலைக் கைதியாகி சுற்றத்தில் பெண்ணைக் கட்டி
வாழ்கின்றேன் வையகத்தில் வாசமில்லா பூவைப்போல

அன்று நாம் கண்ட அந்த வெண்ணிலா இன்றும் உண்டு
ஆதவன் வானம் பூமி அத்தனையும் இங்கே உண்டு
ஆறடி உடலம் கொண்டு நடைப்பிணம் போல நானும்
ஆசைகளே இன்றி இங்கே வாழ்வதற்க்குப் பேர் தான் என்ன

கண்ணடைத்து துயில்கொண்டேன்
கனவினில் வந்துநின்றாய்
கண்ணீரின் வடுக்கள் உந்தன்
கன்னத்தில்………………………….

Abdullah Sir
Alkhobar

Add Comment