அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு-மீண்டும் வந்த ஜெ.ஜெ. நகர்!

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு-மீண்டும் வந்த ஜெ.ஜெ. நகர்!
மதுரை: அரசுப் பேருந்துகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை ரத்து செய்தது. காரணம், அதில் இடம் பெற்றுள்ள கருணாநிதியின் கவிதைகள் மற்றும் கருணாநிதி குறித்த பாடங்கள்.

இந் நிலையில் அனைத்து அரசு பஸ்களிலும் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலை முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக டிரைவருக்கு பின்னால் திருக்குறள் இடம் பெற்றிருக்கும். ஆனால், திமுக ஆட்சியில் இதை மாற்றிவிட்டு கருணாநிதியின் பொன்மொழிகள் எழுதப்பட்டன,

இந் நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் தற்போது கருணாநிதியின் பொன் மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

மீண்டும் வந்த ஜெ.ஜெ. நகர்:
அதே போல ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சென்னையில் மீண்டும் ஜெ.ஜெ.நகர் கிழக்கு என்ற பெயரில் பஸ்கள் இயக்கப்பட ஆரம்பித்துவிட்டன. கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த சேவையை திமுக ஆட்சியில் முகப்பேர் கிழக்கு என்று மாற்றப்பட்டது.

இப்போது மீண்டும் அந்த பஸ்சின் வழித்தடம் ஜெ.ஜெ.நகர் கிழக்கு என்று மாற்றப்பட்டுவிட்டது.
அதே போல திமுக Buy Ampicillin ஆட்சியில் கலைஞர் கருணாநிதி நகர் என்ற பெயரில் இயக்கப்பட்ட வழித்தடம் சுருக்கப்பட்டு கே.கே.நகர் ஆக்கப்பட்டுவிட்டது.

ஒவ்வொரு முறையும் திமுக, அதிமுக அரசுகள் மாறும்போதும் இந்த வழித்தடங்களின் பெயர்களும் மாற்றுவது வாடிக்கையாகி

ELITEGROUP ASS KDNL

Add Comment