சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைதகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

கல்வி உதவி தொகை பெற தகுதியான சிறுபான்மை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மை மாணவ, மளாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கு கல்வி உதவிதொகை (புதியவை மற்றும் புதுப்பித்தல்) நடப்பாண்டிற்கு வழங்க தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த மாணவ, மாணவிகள் முதலாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை பயில்பவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மார்க் பெற்று சிறுபான்மை இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க ÷ண்டும்.பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வேண்டி பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள்ளும் அந்தந்த கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவியரின் பாங்க் சேமிப்பு கணக்கு எண், பாங்க்கின் பெயர், கிளை மற்றும் முகவரியை தொகுத்து தகுதியான மாணவ, மாணவிகளின் பட்டியலை நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்தும் மற்றும் சி.டியில் பதிவு செய்தும் Doxycycline online புதுப்பித்தலுக்கான கேட்பு பட்டியலை வரும் 20 தேதிக்குள்ளும், புதியதற்கான கேட்பு பட்டியலை வரும் ஜூலை மாதம் 10ம் தேதிக்குள்ளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்ப படிவங்கள் மற்றும் கேட்பு பட்டியல் படிவங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை தீதீதீ.õங.கவö.டங/யேலதீ/தீமந்றயிமலம-லடஙவசடாடமற.டால என்ற வெப்சைட்டின் மூலமும் டவுன் லோடு செய்யலாம். சிறுபான்மை மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவி தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

Add Comment