கடையநல்லூர் பாப்பான் கால்வாய் பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் : தொல் திருமாவளவன்

கடையநல்லூர் பாப்பான்கால்வாய் ஆக்ரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளும் நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் ஆக்ரமிப்புகள் அதிகளவில் காணப்படுவதாகவும், இதனால் சாகுபடி முறையாக மேற்கொள்ள முடியவில்லை எனவும் பாசன விவசாய சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பாப்பான் கால்வாயில் உள்ள ஆக்ரமிப்புகள் தொடர்பான சர்வே மேற்கொள்ளப்பட்டது. பாசன விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சியினருடன் சம்பந்தப்பட்ட துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பாப்பான் கால்வாயில் ஆக்ரமிப்பு அகற்றப்படும்போது அப்பகுதியில் குடியிருப்போருக்கு முறையான வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டுமென அரசியல் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் Buy Bactrim விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., நெல்லை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பாப்பான் கால்வாய் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கால்வாய் சீரமைப்பு பணி மேற்கொள்ளும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு குடியிருப்புகள் பாதிக்காத வகையில் பாப்பான் கால்வாயை சீரமைத்து 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டுமென அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆசைத்தம்பி, கொத்தடிமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் துரைஅரசு ஆகியோர் கலெக்டரிடம் வழங்கினர்.

Add Comment