ஒரு காதல் கடிதம் (பீ.எம். கமால், கடையநல்லூர்)

நான் காதலிக்கத்
துவங்கும் முன்பே
நீ என்னைக்
காதலித்தாய் !
உன்னைக்
கண்டு “பிடிக்க”
வேண்டுமென்று
இன்னும் buy Bactrim online நான்
கால்கள் தேய நடக்கின்றேன் !
நீயோ
ஒளிந்திருந்து என்னை
உற்றுப் பார்க்கின்றாய் !
மேகத் தாளில்
மின்னல் வரிகளில்
காதல் கடிதத்
தூது அனுப்புகின்றாய் !
நானோ உனக்கு
கண்ணீரில் தான்காதல்
கடிதம் எழுதுகின்றேன் !
உன்னைக்
காதலித்துக் கொண்டிருக்கும்
காரணத்தால் இன்னும்
பேதலித்துப் போகாமல்
பிரியமுடன் வாழுகின்றேன் !
உன்னைவிட்டால் எனக்கு
உறவுகள் யாருமில்லை !
என்னைவிட்டுப் போகாதே !
இருகரத்தால் அழைக்கின்றேன் !
நீ எழுதிய
காதல் கடிதத்தை
எண்ணி வியந்துநான்
எப்போதும் படிக்கின்றேன் !

உன்
கடிதவரிகளே
என்
இதயத்துப் புண்ணுக்கு
எப்போதும் மருந்தாகும் !

Add Comment