ரூ. 100 கோடியில் சென்னை பல்கலை.யில் தொழில்நுட்பப் பூங்கா

சென்னை பல்கலைக்கழகம் சென்னை அருகே பாலவாக்கத்தில் ரூ. 100 கோடி மதிப்பிலான அறிவியல்,தொழில்நுட்பப் Buy cheap Viagra பூங்கா ஒன்றை அமைக்கவுள்ளது.

அதிக திறன் வெளிப்பாடுக்கான புதுமைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சென்னையில் நடந்தது. அதில் சென்னை பாலவாக்கத்தில் ரூ. 100 கோடி செலவில் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை சென்னை பல்கலைக்கழகம் அமைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கை மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், சென்னை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வர்த்தகப் பிரிவு, கொன்ராட் அடேனர் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தின. சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவாசகம் கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில், புதுமை கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதில் சென்னை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வர்த்தகப் பிரிவின் பங்கு முதன்மையானது. இதுவரை 20 புதுமை கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கியுள்ளது. இனி வருங்காலத்தில் மேலும் பலரை உருவாக்கும் என்று திருவாசகம் கூறினார்.

சென்னை பாலவாக்கத்தில் ரூ. 100 கோடியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவை சென்னை பல்கலைக்கழகம் அமைக்கவுள்ளது. அதற்குத் தேவையான நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Add Comment