கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தீர்மானங்கள்

24 .05 .   2011  அன்று இறையருளால் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1)    மார்க்கத்திற்கு மாற்றமான தர்ஹா வழிபாடு, தாயத்து, தகடுகள், மத்ஹபு பிரிவினைகள், வட்டி, வரதட்சணை  போன்றவை பெரும்பாவங்ளாகும். இவை நாளை நம்மை நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். இத்தகைய பெரும்பாவங்களை இஸ்லாமிய பெருமக்கள் தவிர்ந்து வாழ வேண்டும் என இப்பொதுக் கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டிக் கொள்கிறது.
2)    பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்கள் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முஸ்லிம்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில் மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு, இந்திய அரசியல் சாசனச் சட்டத்திற்கு உட்பட்டு மேல்முறையீடு செய்யபடும் பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதீமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டிக் கொள்கிறது.
3)    சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி, கல்விக் கடன் ஆகியவை சென்ற ஆண்டு அதிகாரி களின் ஆணவப் போக்காலும் கல்வி நிலை யங்களின் அலட்சியப் போக்காலும் பெரும் பாலான Bactrim online முஸ்லிம்களுக்கு கிடைக்க வில்லை. அதுபோல் இந்த ஆண்டு நடக்கா மல் இருக்க தெளிவான வழிகாட்டுதலை வழங்கி அலைக்கழிக்காமல் முஸ்லிம் சமுதாயம் பயன் பெற தெளிவான வழிகாட் டுதலை அறிவிக்குமாறு தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கேட்டுக் கொள்கிறது.
4)    கடையநல்லூரில் சென்ற ஆண்டு பரவிய மர்ம விஷக்காய்ச்சல் மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தக் காய்ச்சலினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி மற்றும் மதுரையில் உள்ள மருத்துவமனைகளிலே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த மர்ம விஷக்காய்ச்சலினால் பலர் உயிரிழந்துள்ளனர். கடையநல்லூரில் காணப்படும் சுகாதாரச் சீர்கேடே இதற்கு மிக முக்கியக் காரணமாகும். சுகாதாரச் சீர்கேட்டை நீக்கி உயிரைப் பலிவாங்கும் இந்த விஷக்காய்ச்சலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய சுகாதாரத்துறையும், கடையநல்லூர் நகராட்சியும் இதுவரை உருப்படியான எந்த ஒரு நடவடிக்கைகளையும் மேற்க்கொள்ளவில்லை. கடையநல்லூர் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையின் இந்த அலட்சியப் போக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வண்மையாகக் கண்டிக்கிறது.
5)    கடையநல்லூரில் பரவும் மர்ம விஷக் காய்ச்சலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு கடையநல்லூர் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை மிகவிரைவாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் இன்னும் ஒரு சில நாட்களில் மக்கள் சக்தியைத் திரட்டி கடையநல்லூர் நகராட்சி, சுகாதாரத்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்து மாபெரும் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
6)    கடையநல்லூர் முழவதும் சுகாதாரம் சீர்கேடடைந்து காணப்படுகிறது. குப்பைகள் சரியாக அள்ளப்படுவது கிடையாது. குப்பைகளில் ப்ன்றிகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் இனம்புரியாத பல நோய்களால் மக்கள் மிகவும பாதிக்கப்டுகின்றனர். குறிப்பாக தெப்பக் குளம் பகுதி, கலந்தர் மஸ்தான் தெரு தென்பகுதியில் உள்ள ஃபாத்திமா நகர் பகுதி, மக்கா நகர் பகுதிகள் போன்ற பல இடங்களில் குப்பை கூளங்களாக காட்சியளிக்கின்றன. இந்தக் குப்பைகளை முறையாக அகற்றுவதற்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகள் வைப்பதற்கும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக் கூட்த்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
7)    கடையநல்லூரில் பல்வேறு பகுதிகளில் பல மாதங்களாக தெருவிளக்குகள் சரியாக எரிவது கிடையாது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் கடையநல்லூரின் அனைத்துப் பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் விநியோகமும் செய்யப்படுவதில்லை. மக்களைப் பாதிப்பிற்குள்ளாக்கும் இது போன்ற குறைகளைக் களைவதற்கு நகராட்சி நிர்வாகம் உடனயடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
8)    அறிவிக்கப்பட்ட மின் வெட்டின் காரணமாகவே பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டும் பல மணிநேரங்கள் நீடிக்கிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் பாதிக்கும் இந்த மின்வெட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக  கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
(கே.எம். அய்யூப்)
தலைவர்

Add Comment