சன் டிவி லாபம் ரூ.772 கோடி!

சென்னை: சன் டிவி Buy Amoxil குழுமத்தின் லாபம் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் ரூ. 772 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது இந்த நிறுவனம்.

கடந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் ரூ. 567 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இது 36 சதவீதம் அதிகரித்து ரூ. 772 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில் மொத்த வருமானம் ரூ. 1,437 கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டு ரூ. 1,970 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு (மதிப்பு ரூ.5) ரூ. 3.75 டிவிடன்ட் வழங்க இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது.

Add Comment