மரியம்பிச்சை மரணம்: ஆந்திர, கேரளப் போலீஸாரிடம் தகவல் பரிமாற்றம் TAMILNADU

மரியம்பிச்சை மரணம்: ஆந்திர, கேரளப் போலீஸாரிடம் தகவல் பரிமாற்றம்

பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் அமைச்சர் மரியம்பிச்சை மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, ஆந்திர, கேரள போலீஸாரிடம் புதன்கிழமை தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது.பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத லாரி மீது கார் மோதிய விபத்தில் அமைச்சர் என். மரியம்பிச்சை (60) உயிரிழந்தார்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப் படையினர் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்காததால், Buy cheap Amoxil சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகின்றன.
சம்பந்தப்பட்ட லாரி முதலில் டாரஸ் வகை எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் கன்டெய்னர் வகை எனத் தெரிய வருகிறது. பதிவு எண் பலகையில் தொடக்கமாக கேஎல்’ என இருந்ததாகவும், இப்போது, ஏபி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் இரு விதமான தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. இதனால் குழப்பம் நிலவுகிறது.
இதனிடையே, திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் சுங்க மையத்துக்கு அருகேயுள்ள கேமராவில் பதிவான பதிவுகளை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சேகரித்தனர். இதில் கேஎல், ஏபி பதிவுகளுடைய எண்கள் சேகரிக்கப்பட்டு, அதுதொடர்பான தகவல்களை ஆந்திர மாநிலம், கேரள போலீஸாருக்கு புதன்கிழமை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
மேலும், பாடாலூர் பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு வந்து செல்லும் லாரிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.ஆனால், புதன்கிழமை இரவு வரை குறிப்பிடும்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, இந்தச் சம்பவத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
ALELITE

Add Comment