உறக்கம்…

குளிருக்கு இதமாய்
உடல் குறுக்கி உறங்கையில்,
என்மேல் பொதிந்து தழுவும்,
போர்வையாய் உன் ஞாபகங்கள்…

உறக்கத்தின் உச்சியில்
உளறிய வார்த்தைகள்
உள்ளிருந்து நீ அனுப்பிய
கவிதையின் மிச்சங்கள்…

புன்னகைத்தல், புரண்டு படுத்தல்,
விளையாடிய பொழுதுகளின்
கலையாத நினைவுகள்…

விசும்பல், வெறும் உறக்கம்,
ஊடல் Bactrim No Prescription நடந்த இரவின்
மிச்சத் தூறல்கள்…

பதறி எழுதல் மட்டும்
கெட்ட கனவென்றே எனை,
வாரி அணைக்கும் உன் கத கதப்பில்
உறங்குகிறேன் நிஜமாய்…

Add Comment