அமெரிக்க பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் ஜாக்கி சானின் தி காராத்தே கிட்!

ஜாக்கி சான் நடித்து சில தினங்களுக்கு முன் வெளியான தி கராத்தே கிட் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் ஞாயிற்றுக் கிழமை வட அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்துவிட்டது. இந்தப் படத்துடன் வெளியான ‘தி ஏ டீம்’ இருக்குமிடம் தெரியவில்லை.

ரூ 40 Buy cheap Amoxil மில்லியன் செலவில் தயாராகியுள்ள இந்தப் படம், முழுக்க முழுக்க சீனாவில் எடுக்கப்பட்டது. முதல் மூன்று நாள் வசூல் மட்டும் 56 மில்லியன் டாலர்கள்!

தி ஏ டீமின் வசூல் இதில் பாதியைக் கூடத் தொடர்வில்லை. இந்தப் படத்தை 90 மில்லியன் செலவில் எடுத்துள்ளனர்.

பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் இளம் கராத்தே வீரனாகவும், அதிரடி நாயகன் ஜாக்கி சான் அவரது குருவாகவும் நடித்துள்ளனர், தி கராத்தே கிட்-டில்.

1984-ல் இதே தலைப்பில் ஜான் ஜி எவில்ட்ஸன் இயக்கி வெளியான படத்தைத்தான் இப்போது ஜாக்கி சான் – ஜேடன் ஸ்மித்தை வைத்து ரீமேக் செய்துள்ளார் ஹெரால்ட் ஸ்வார்ட் .

சென்னையில் சமீபத்தில் வெளியான தமிழ்ப் படங்களை விட நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment