ஏமனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அரசு அறிவுரை!

Buy cheap Lasix justify;”>அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை பரவி வருவதால் ஏமனில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு இந்திய அரசு கோரியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் பேசிய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், ஏமனில் நடைபெற்று வரும் வன்முறைகளைத் தொடர்ந்து அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எவ்வகையில் எல்லாம் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியுமோ அந்த வகைகளில் விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

தற்போது ஏமனை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகள் தடைபடும் இந்தியர்கள் ஏமனைவிட்டு வெளியேற வேண்டும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏமனில் சுமார் 11 ஆயிரம் இந்தியர்கள் வசிப்பதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Comment