கேடி சகோதரர்களின் முடிவின் ஆரம்பம் ?

கருணாநிதியை விட தீய சக்தி இந்த கேடி சகோதரர்கள் (கலாநிதி மற்றும் தயாநிதி) என்று சவுக்கு,“கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? என்று ஏப்ரல் 10ம் தேதி எழுதியிருந்தது.

அந்தக் கட்டுரையில் முக்கியமான சில விஷயங்கள் விட்டுப் போய் இருந்ததை பாண்டியன் என்ற ஒரு அன்பு வாசகர் சுட்டிக் காட்டியிருந்தார். அந்த விடுபட்டுப் போன விஷயங்களை இந்தக் கட்டுரையில் சேர்த்துப் படிப்பது பொருத்தமே.

 

பூமாலை இதழுக்கென்று புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்தாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்களையே சம்பளமில்லாத செய்தியாளர்களாக , பேட்டியாளர்களாக பயன்படுத்திக்கொண்டனர் மாறன் சகோதரர்கள்.

Dayanidhi_Kalanidhi_Maran_Loyola_Alumni_Association_2010_stills_05

வீடியோ கடைகள் மற்றும் நூலகங்களின் வாயிலாக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த வீடியோ இதழை விரும்பி பார்க்க ஆளில்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் தி.மு.க வசமிருந்த காரணத்தால் விற்க மறுத்த வீடியோ நூலகத்தினர், ‘வில்லங்கத்தில் மாட்டநேரிடும், ரெய்டு நடத்தி ஆபாச கேசட்டுகள் இருந்ததாக வழக்குப்போட்டு லைசென்ஸ் ரத்தாகக் கூடும் ‘ என எச்சரிக்கப்பட்ட சம்பவங்களெல்லாம நடந்தேறியது.

 

அப்போது மாதமாதம் சேட்டிலைட் ஒளிப்பரப்பிற்காக செலுத்த வேண்டிய பணம் ஒரு பெரும் சுமையாக இருந்தது. எனவே மாறன் மாற்று வழிகளை ஆராய்ந்தார்.

 

‘சன்’ சேனலை நடத்த பெரும் பணம் தேவைப்பட்டநிலையில், அதற்காக இந்தியன் வங்கியை அணுகியபோது இணக்கமான பதில் கிடைக்கவில்லை இதனால் கட்சி சொத்தை -ஆயிரமாயிரம் உடன் பிறப்புகள் திரட்டி தந்த நிதியை- மந்தை வெளியிலுள்ள கும்பகோணம் சிட்டி யீனியன் வங்கியில் போட்டு, பெரியதொரு நிதி உதவி வங்கியிடமிருந்து வாங்கப்பட்டது .

 

1967 தொடங்கி தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும் , அடுத்து வி.பி.சிங் ஆட்சியில் நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாகவுமிருந்த முரசொலிமாறன், தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித்தந்து நெருக்கமாக உறவுகொண்டிருந் தார். கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்திலேயே சன்தொலைகாட்சி செயல்பட்டது. குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் பத்திரிகையாளர்க ள் சிலரையே கூடுதலாக 500 ரூபாய் சம்பளம் தந்து சன் தொலைக்காட்சிக் கு பணிபுரியும் படி கட்டாயப்படுத்தி னர். பிரகாசிக்கமுடியாத ‘சன்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சன் தொலைக்காட்சியை நிமிர்ந்தும் பார்க்காத- விளம்பரத்தாரர்கள் பொருட்ப்டுத்தாத அந்த நேரம் தூர்தர்ஷன் மட்டுமே தூள் கிளப்பிக் கொண்டிருந்தது. மாறன் சகோதர்களுக்கு படைப்பாற்றல் கிடையாது. நிர்வாகத் திறமையும் இல்லை. பார்வையாளர்களை கவரமுடியவில்லை எவ்வளவோ அனுகூலங்கள் அமைந்தும் முதலிரண்டு ஆண்டுகள் மூச்சுத் திணறி நஷ்டப்பட்டது சன் தொலைக்காட்சி.

 

*அதிகாரத்தால் அமைந்த வளர்ச்சி*

Kalanidhi_Maran_Loyola_Alumni_Association_2010_stills_10

மீண்டும் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்குவந்தார். உதயசூரியனின் அதிகாரச் சுடர் சன் தொலைக்காட்சியின் சாம்ராஜ்ஜியத்திற்கு வழிகோலியது. அப்போதைய தூர்தர்ஷன் இயக்குநராயிருந்த நடராஜன் கருணாநிதிக்கு உதவியாக பல கைங்கரியங்களைச் செய்து அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவலத்திற்கு ஆளாக்கினார். மத்திய அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு மாறன் மகன்களுக்கு மதியூகியாகச் செயல்பட்டார்.

 

அதிகாரப் பலத்தால் மிகப்பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் சரசரவென வந்தது. சன் தொலைக்காட்சிக் கு! மளமளவென்று வெவ்வெறு மொழிகளில் சேனல்களைத் துவங்கினர். 2000ஆவது ஆண்டில் தி.மு,க ஆட்சியிலிருக்கும் போது, ‘சுமங்கலி கேபிள் விஷன்’ என்ற கேபிள் நெட்வொர்க் தொழிலை தயாநிதிமாறன் ஆரம்பித்தார். அது நாள் வரை சென்னையில் கேபிள் நெட்வொர்க்கின் 60 சதவிகித்தை ‘ஹாத்வே’ என்ற வட இந்திய நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது. 40 சதவிகிதம் ஆங்காங்கே சிறிய கேபிள் உரிமையாளர்கள் வசமிருந்தது. தயாநிதிமாறன் தடாலடியாக சென்னைகேபிள் ஆபரேட்டர்களை அழைத்து சொந்த முயற்சிகளை, ஒளிபரப்புகளை அப்படியே கைவிட்டு, சுமங்கலி கேபிள் விஷனின் கமிஷன் ஏஜென்டாகும் படி நிர்பந்தித்தார். மறுத்த கேபிள் ஆபரேட்ட்ர்கள் மிரட்டப்பட்டனர் . சென்னை மாநகராட்சி ஸ்டாலின் வசமிருந்த காரணத்தால் கேபிள் ஆபரேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்த தொல்லைகள் அவர்களை மண்டியிடச் செய்தன மாறன் சகோதரர்களிடம்!

 

‘ஹாத்வே’யின் கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுத்தெறியப் பட்டன. இந்நிறுவனம் பைபர் கேபிள் நெட்வொர்க் சிஸ்டத்திற்கு பலமான ஏற்பாடுகள் செய்துவிட்ட நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்தது. மறுபுறம் தயாநிதி தந்த நெருக்கடிகளால் ஹாத்வேயின் கீழ் இருந்த கேபிள் ஆபரேட்டர்களில் 90சதவிகிதத்தினர் எஸ்.சி.வி வசம் மாறினர்.

 

இந்தியாவில் மும்பை, டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா உள்ளிட்ட எந்த நகரத்திலுமே இதுபோல் ஒட்டுமொத்த கேபிள் ஆபரேட்டர்களும் ஓரே குடையின் கீழ் சென்றதில்லை.

ponnar-shankar-movie-premiere-show-stills_17_161545123

தொலைக்காட்சி, விண்தொலைக்காட்சி, தினத்தந்தியின் ஏ.எம்.என். நியூஸ் சேனல் உள்ளிட்ட தமிழ் சேனல்கள் தரக்குறைவான அலைவரிசைகளில் ஒளிப்பரப்பட்டு Ampicillin No Prescription ஓரம் கட்டப்பட்டன. கேரளாவில் பிரபலமான ‘ஏசியாநெட்’ தொலைக்காட்சி தமிழில் ‘பாரதி’ தொலைக்காட்சியை த்தொடங்கி பற்பல தொல்லைக்களுக்காளாகி சன் குழுமத்தால் சவக்குழிக்குள் தள்ளப்பட்டது. இந்தியா டுடே குழுமத்திலிருந் து வெளிவரும் ‘ஆஜ்தக்’சேனலை தமிழ்நாட்டிற்குள் ஒளிப்பரப்ப மறுத்துவந்தார் கலாநிதிமாறன். கருணாநிதி கைதான சம்பவத்தை மீண்டும் மீண்டும் வட இந்தியாவில் ஒளிப்பரப்பி மாறன் சகோதரர்களின் மனதில் இடம்பிடித்தது ‘ஆஜ்தக்’. இதனால் உடனே ‘ஆஜ்தக்’ சேனல் தமிழ்நாட்டில் ஒளிப்பரப்ப ஒப்பந்தமானது.

 

இதற்கு பிரதியுபகாரமாக இந்திய முதலமைச்சர்களின் நிர்வாகத்திறமை வரிசையில் ஜெயலலிதா ஆகக்கடைசியில் இருப்பதாக ஒவ்வொரு ஆண்டும் கருத்துகணிப்பு வெளியிட்டது இந்தியாடுடே.

 

ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா, ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின் குடும்பத்திலிரு ந்து வந்தவர். ஆண்டாண்டு காலமாக கட்சிக்கு ஊனும், உயிரும் தந்து உழைத்த உடன் பிறப்புகள் ஆயிரமாயிரமாய் இருக்க, அவர்களிலும் அறிவிற்சிறந்த. அரசியல் அறிந்தவர்கள் பலர் இருக்க, H.F.O (Hell Freezes Over) எனப்படும் இரவு நேர விடுதி நடத்தி கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனை அவரது குடும்பத்தினர் அரசியலுக்கு ஆயத்தப்படுத்தினர்.

 

அரசியலில் அடிஎடுத்து வைத்தவுடனேயே தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தாரை வார்க்கப்பட்டது. முதன்முதலாக பாராளுமன்றத்தில் கால் பதிக்கும் போதே ‘காபினெட்’ அந்தஸ்த்து அமைச்சரானார்.

 

ஜெமினி தொலைக்காட்சியில் ரவிபிரசாத், மனோகர்பிரசாத் என்ற சகோதரர்கள் பங்கு தாரர்கள். இவர்கள் இருவரும் இந்தியன் வங்கியில் ரூ700 கோடி கடன் பெற்று இன்று வரை வட்டி உட்பட கட்டவில்லை. இதை இந்தியன் வங்கி தமிழ் தினசரியில் விளம்பரமாகவே வெளியிட்டது. ஜெமினியில் கலாநிதி மாறனின் பங்கு

 

சதவிகிதமாகும். ஜெமினி நல்ல லாபகரமாகவே தொழில் செய்து பணம் ஈட்டுகிறது.இன்று வரை பிரசாத் சகோதரர்கள் இதன் இயக்குநர்களாகதா ன் இருக்கிறார்கள். மாறன் சகோதரர்களின் அதிகார செல்வாக்கின் முன்பு சட்டம் தன் கைகளை கட்டிக் கொண்டு விட்டது. பங்குசந்தையில் சன் குழுமத்தை முக்கியப்படுத்துவதற்காக, உண்மைக்கு மாறான தகவல்களையும், கணக்குகளையும் கலாநிதி காண்பித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசின் SEBI அமைப்பையும், மக்களையும் முட்டாளாக்கி சன் குழுமத்தின் சந்தை மதிப்பை பிரம்மாண்டமாக உயர்த்திக்கொண் டார்.1993ல் தொடங்கிய சன் குழுமத்தை 1985லிருந்து செயல்படுவதுபோல் அவரால் எப்படிதான் கணக்கு காட்ட முடிந்ததோ….. தெரியவில்லை. சன் குழுமத்தின் கேபிள் ஆபரேஷன் கணக்குகளில் இது வரை பாதிக்கும் குறைவான வாடிக்கையாளர் கணக்கே வருமான வரித்துறைக்கு காட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி வருமானவரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.

l2006121711649

புதிதாக வரும் திரைப்படங்கள் சன் தொலைக்காட்சிக்குத்தான் விற்க்கப்படவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். இந்த நிர்பந்தங்களுக்கு உடன் படாத திரைப்படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் சன் தொலைக்காட்சியின் ‘டாப் 10 மூவிஸ்’ திரை விமர்சனத்தில் கடைசி எண் தந்து கண்டபடி தாக்கி விடுகின்றனர்..! போதாகுறைக்கு தினகரன், குங்குமம் இதழ்களும் குதறி தீர்த்து விடுகின்றன சம்மந்தப்பட்ட திரைப்படத்தை ! இந்த ஊடகப் பலத்தை கண்டு மிரளும் தயாரிப்பாளர்கள் சன் குழுமத்திடம் சரணாகதியாகி விடுகின்றனர்

 

போட்கிளப்பில் 36 கிரவுண்ட் பரப்பளவில் கலாநிதி மாறனின் 25,000 சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பங்களா உள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல் அமெரிக்கா மற்றும் லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட பைபர் மற்றும் விலை உயர்ந்த மரப்பொருட்களைக் கொண்டு அழகூட்டப்பட்டு சொர்க்கபுரியில் இருக்கும் சொகுசு மாளிகைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் வாடினாலும் இந்த பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். இந்த ஆடம்பர பங்களாவை விவரிக்க ஆரம்பிப்பது பக்கங்களை வீணாக்கிவிடும் என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன். ஆனால் ஒரு காலத்தில் காமராஜர் வாழ்ந்த திருமலை பிள்ளை சாலை இல்லத்தை புகைப்படமெடுத்து, ‘ஏழைபங்காளன் வாழும் பங்களா பார்த்தீர்களா….? என்று ஏளனம் செய்தவர்களின் நினைப்பு ஏனோ வந்து தொலைகிறது.

 

சுமார் 40,000 கோடிக்கு அதிபதியான கலாநிதி மாறன் தன் தந்தை முரசொலி மாறனின் மருத்துவ செலவுக்காக மத்திய அரசு செலவிட்ட ரூபாய் 40 கோடியை இன்று வரை திருப்பித் தர மனமில்லாதவராய் இருக்கிறார்

 

இதுதான் தோழர் பாண்டியன் தெரிவித்த விபரங்கள்.

 

நேற்று, விக்கிலீக்ஸ் கேபிளைப் பார்த்தவுடன், கருணாநிதியே இதை ஏற்றுக் கொள்வார். இப்போது என்ன, அவர் எப்போதோ ஏற்றுக் கொண்டு விட்டதனால் தான், அவர்களோடு சமரசமாகப் போய்க் கொண்டு இருக்கிறார்.

 

இந்த தேர்தல் முடிவுகள், திமுகவை சுனாமியில் சிக்கிய சுள்ளிக்காடாக மாற்றி அலங்கோலப்படுத்தியிருந்தாலும், இன்னும் இந்த சுனாமியில் தப்பித்து எதையாவது பிடித்து கரையேறத் துடிப்பவர்கள் கேடி சகோதரர்கள்.

 

ஏற்கனவே கேடி சகோதரர்கள், திமுக காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்ளும் சூழலில், திமுக எம்பிக்களை கட்சித் தாவ வைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து, திமுகவை உடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், கேடி சகோதரர்களின் முடிவு தொடங்கியிருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிகின்றன. இது தமிழ் கூறும் நல்லுலகிற்கு மகிழ்ச்சியான செய்தியேயன்றி வேறில்லை.

l200607159203

 

பணமா ?   எங்க… ?

2ஜி விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்தபிறகு சூடு பிடித்த விசாரணையை உச்ச நீதிமன்றம் வழிநடத்தியது. உச்ச நீதிமன்றம் 1999 முதல், 2008 வரை உள்ள காலத்தில் ஒதுக்கீடு செய்யப் பட்ட ஸ்பெக்ட்ரம் பற்றிய விவகாரங்களை விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டது.

 

1999 முதல் 2008 வரை தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் 4 பேர். முதலாமவர் பிரமோத் மஹாஜன். அவர் இறந்து விட்டார். இரண்டாமவர் அருண் ஷோரி. அவரை சிபிஐ விசாரித்து விட்டது.   நான்காவது நபர், திஹாரில் இருக்கிறார். மூன்றாவது நபரான தயாநிதி மாறனை சிபிஐ இன்னும் விசாரிக்கவில்லையே என்ற ஐயம் இருக்கவே செய்தது. ஆனால் ஐயப்படத் தேவையில்லை. விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று, சிபிஐ வட்டாரங்கள் கூறுவதாக, நேற்று வெளியான எகனாமிக் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது.

 

தயாநிதி மாறனின் தில்லுமுல்லுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.   டிசம்பர் 2006ல் ஏர்செல் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனம் டிஷ்நெட் வயர்லெஸ்ஸுக்கு தயாநிதி 14 புதிய லைசென்சுகளை ஒதுக்குகிறார். ஸ்பெக்ட்ரம் வேண்டிய ஏர்செல்லின் விண்ணப்பத்தை நெடுநாட்களுக்கு தயாநிதி மாறன் நிலுவையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்காமல் வைத்திருந்தார். இந்த நேரத்தில் ஏர்செல் நிறுவனத்தின் சிவசங்கரனுக்கு, அவரது நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸுக்கு விற்க வேண்டுமென தயாநிதி கடும் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. விற்காவிட்டால் தொழிலே நடத்த முடியாது என்ற நெருக்கடியில் சிவசங்கரனும் தனது நிறுவனத்தை விற்று விட்டார். இதற்குப் பிறகு, ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் படுகையில், ஐடியா மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் படாமல் நிலுவையில் இருந்தன என்பது குறிப்பிடத்தகந்தது.

 

இதற்கு நான்கு மாதங்கள் கழித்து, மேக்சிஸ் நிறுவனம், மொரிஷியஸைச் சேர்ந்த தனது துணை நிறுவனம் ஆஸ்ட்ரோ ஆல் ஏஷியா நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனம் மூலமாக கேடி சகோதரர்களுக்குச் சொந்தமான சன் டைரெக்ட் நிறுவனத்தில் 830 கோடியை முதலீடு செய்கிறது.

l2007032812742

சன் டைரெக்ட் நிறுவனத்தில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்யும் நேரத்தைப் பார்க்க வேண்டும்.   ஏப்ரல் 2007ல் 830 கோடியை முதலீடு செய்கையில் சன் டைரெக்ட் தனது பணிகளைத் துவக்கவேயில்லை.   மேலும், சன் டைரெக்ட் தொடங்கி முதல் 5 ஆண்டுகளுக்கு நஷ்டம் என்றும், 6வது ஆண்டு முதல் தான் லாபம் கிடைக்கும் என்றும், சன் குழுமத்தாலேயே தீர்மானிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் தான், ஆஸ்ட்ரோ நிறுவனம் 830 கோடியை முதலீடு செய்கிறது. சன் டைரெக்ட் நிறுவனத்தின் ஒரு பங்கை 70 ரூபாய் ப்ரீமியம் கொடுத்து வாங்குகிறது. இந்த 830 கோடி ரூபாய் வெறும் 20 சதவிகித பங்குகளுக்கானது என்பது குறிப்பிடத் தகுந்தது. மீதம் உள்ள 80 சதவிகிதத்தை கலாநிதி மற்றும் காவேரி கலாநிதி வைத்திருக்கின்றனர்.

 

வாங்குகையில் சன் டைரெக்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு என்று, 3320 கோடி தொகையை நிர்ணயம் செய்கிறது ஆஸ்ட்ரோ. இந்த டீல் முடிந்த மறு நாள், ஸீ குழுமத்தின் டிடிஎச் நிறுவனமான டிஷ் நெட்டின் ஒரு பங்கின் விலை மும்பை பங்குச் சந்தையில் 61.25.   டிஷ் நெட்டின் மொத்த மதிப்பு 2622 கோடி. இந்த மதிப்பு டிஷ் நெட் தனது சேவையை தொடங்கிய பிறகு நிர்ணயம் செய்யப் பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த நிலையில் எதற்காக ஆஸ்ட்ரோ நிறுவனம் இவ்வளவு அதிக தொகை கொடுத்து வாங்க வேண்டும் ? இது என்ன மாம்பலம் மார்க்கெட்டில் கத்திரிக்காய் வாங்குவதா ? இந்த மர்மத்தைத் தான் சிபிஐ விசாரித்து வருவதாகத் தெரிகிறது.

 

இது மட்டுமல்லாமல், ஆஸ்ட்ரோவின் ஆனந்த கிருஷ்ணன், கேடி சகோதரர்களுக்குச் சொந்தமான சவுத் ஏஷியா எஃப்எம் என்ற நிறுவனத்தில் ஆகஸ்ட் 2009ல் 20 சதவிகித பங்குகளுக்கு ஈடான தொகையாக 450 கோடியை முதலீடு செய்கிறார். இந்தியாவில் 45 நகரங்களில் எப்எம் சேவையை நடத்திக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிக் எப்எம் நிறுவனத்தின் மொத்த மதிப்பீடே 300 கோடி என்று இருக்கையில், 20 சதவிகித பங்குகளுக்கு எதற்காக 450 கோடி ரூபாயை ஆஸ்ட்ரோ நிறுவனம் கேடி சகோதரர்களுக்கு வழங்க வேண்டும் ?

 

இந்த விவகாரத்தில் சிக்கும் மற்றொரு பெருந்தலை அப்போலோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி. பிரதாப் ரெட்டியின் மருமகன் ஏர்செல் நிறுவனத்தில் 25 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். எகனாமிக் டைம்ஸ் நாளேடு, அப்போலோ மருத்துவமனையை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட போது, மறுத்திருக்கிறார்கள். இந்த பணக்காரர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது போலிருக்கிறதே…..

l200606289014

 

உங்க டாடா நிறுவனத்த நீங்க ஏன் சன் டிவிக்கு விக்கக் கூடாது ?

இந்த அத்தனை விவகாரங்களையும் சிபிஐ விசாரித்து வருகிறது. இது குறித்து முதல் தகவல் அறிக்கை ஜுலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப் படும் என்று தகவல்கள் கூறுகின்றன. தாக்கல் செய்யப் பட்டால், திஹார் சிறையில் தள்ளப்படும் நான்காவது எம்.பியாக தயாநிதி மாறன் இருப்பார்.

 

கேடி சகோதரர்களுக்கு அடுத்த பெரிய அடியாக வந்தது விக்கிலீக்ஸ் கேபிள்கள்.   எல்லாவற்றிலும் ஆதாயம் பார்க்கும் மனிதர்கள் இருக்கத் தானே செய்வார்கள்.   இந்து ராம், இதிலும் ஆதாயம் பார்த்திருக்கிறார்.   விக்கி லீக்ஸ் கேபிள்கள், ராமிடத்தில் வந்து இரண்டு மாதங்கள் ஆனாலும், தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்து, இப்போது அதை வெளியிட்டு, ஜெயலலிதாவிடம் நல்லபிள்ளை பெயர் வாங்கியிருக்கிறார்.

 

May-24-e

 

கடந்த 5 ஆண்டுகளாக, ராம், கருணாநிதிக்கு அடித்த ஜால்ரா சத்தம் காதைக் கிழித்ததை ஜெயலலிதாவும் அறிவார். ஆனாலும், இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக நீடிக்க வேண்டும் என்ற வெறி, ராமை, சுயமரியாதையை கஸ்தூரி அன்ட் சன்ஸ் வாசலிலேயே கழற்றி வைத்து விட்டு, ஜெயலலிதாவை இன்று சந்திக்க வைத்துள்ளது. பணமும் அதிகார போதையும் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது பாருங்கள்.

 

இந்த விக்கிலீக்ஸ் கேபிளில், அமேரிக்க துணைத் தூதரக அதிகாரி, டேவிட் டி.ஹுப்பர் என்பவரிடம் உரையாடிய போது தயாநிதி மாறன் தெரிவித்ததாக சில கருத்துகளை அவர் அமேரிக்க அரசாங்கத்துக்கு உளவு அறிக்கையாக அனுப்பியுள்ளார். இந்த உரையாடல் நடைபெற்றது 23 பிப்ரவரி 2008ல்.

l200608019362

 

எல்லா துட்டையும் நானே எடுத்துக்குவேன்

அந்த உரையாடலின் போது, தயாநிதி மாறன், “இப்போது உள்ள நிலை தொடர்ந்தால், திமுக இப்போது உள்ள எம்பிக்களில் பாதியை மீண்டும் பெறுவதே கடினம். அதிகாரம் கைக்கு வந்தவுடன், அரசியலில் பணம் பண்ணுவதே குறிக்கோள் என்று செயல்படுகிறார்கள். இலவசங்கள் கொடுப்பதால் எந்தப் பலனும் இல்லை. கொடுத்ததை வாங்கி, மறந்து விட்டு, தேர்தல் நேரத்தில் இப்போது என்ன தருவீர்கள் என்று கேட்பார்கள்.” என்று கூறியிருக்கிறார் மாறன்.   அந்த அமெரிக்க அதிகாரி, அந்த கேபிளிலேயே, மாறனின் பதவி பறிக்கப் பட்டதாலும், திமுக தலைவருடனான உறவு முறிந்து விட்டதாலும், “ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற அடிப்படையிலேயே மாறன் இந்தக் கருத்தை தெரிவித்ததாகவும், இதற்கு முன்பு மாறனும் இலவச டிவி விழாக்களில் பங்கெடுத்தவர் தான் என்றும் குறிப்பிடுகிறார்.

23dayanidhi_2_63753_637539a

இதையடுத்து ராகுல் காந்தி ஒரு பிரபலமான தலைவர் என்றும், அவருக்கு பெரிய எதிர்காலம் உள்ளது என்றும் மாறன் கூறியதாக குறிப்பிடும், அமேரிக்க துணைத் தூதர், ராகுல் காந்தி வட இந்தியாவில் ஆனது போல, தானும் தென்னிந்தியாவில் ஆகலாம் என்ற அபிலாஷையின் அடிப்படையிலேயே தயாநிதி மாறன் இந்தக் கருத்தை தெரிவித்ததாகவும் கூறுகிறார்.

 

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், முன்ன பின்ன தெரியாத வெள்ளைக்காரனிடம் உண்மைகளை பட்டவர்த்தனமாக பேசும் இந்த அயோக்கியர்கள், தங்களுக்கு வாக்களிக்கும் பாமர மக்களிடம் பொய்யைத் தவிர வேறு எதுவுமே பேசுவதில்லை என்பதுதான்.   இந்த அயோக்கியர்களுக்கு வாக்களித்து அதிகாரத்தை அளிக்கும் பாமர மக்களிடம் பொய்யையும் புனைசுருட்டையும், நேரிலும், தொலைக் காட்சி மூலம் அவிழ்த்து விடும் இவர்களைப் பற்றி அந்த அமேரிக்கர்கள் என்ன மதிப்பீடு வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வார்களா ?

 

அடுத்த விவகாரம், மற்ற மாநிலங்களில் உள்ள தலைவர்களைப் பற்றி விக்கிலீக்ஸ் கேபிள்கள் வெளியான போது, மகிழ்ச்சியோடு அதை செய்தியாக வெளியிட்ட சன் டிவி, மாறனின் உண்மைகள் அம்பலமான போது அமைதி காத்தது குறிப்பிடத் தகுந்தது.

 

எக்கனாமிக் டைம்ஸுக்கும், விக்கிலீக்ஸ் கேபிளை வெளியிட்டதற்காக இந்து நாளேட்டுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள் கேடி சகோதரர்கள். இந்த கேடி சகோதரர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ஊடகங்களை மிரட்டுவதை ஒரு தொழிலாகவே வைத்திருக்கிறார்கள்.

ET_NOTICE_1_Page_06

பெரும் பொருட்செலவில் எடுக்கப் பட்ட எந்திரன் படம் காலியாக ஓடுகிறது என்று டெக்கான் க்ரோனிக்கிள் நாளேடும், தினமணி நாளேடும் செய்தி வெளியிட்டன.   இதையடுத்து இந்த இரண்டு நாளேடுகளுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள்.   தினமணி நாளேடு, இணைய தளத்தில் கிடைக்கும் எந்திரம் திரைப்படம் என்று பதிலுக்கு செய்தி வெளியிட்டதும் வாயை மூடிக் கொண்டு அமைதியானார்கள்.

 

ஊர் உலகத்தில் இவர்களுக்கு மட்டும் தான் வக்கீல்களைத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா ?   மற்றவர்கள் யாருக்கும் வக்கீலையே தெரியாதா ? இவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சரியான முட்டாள்களாக இருக்கிறார்களே.. ? எக்கனாமிக் டைம்ஸ் நாளேடு, இவர்களின் கருத்து என்ன என்பதை கேட்டறிய மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்ட போது ஏன் பதில் கூறவில்லை ?   சரி, செய்தி வெளியிட்டதற்காக எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே கேடி சகோதரர்களே….   உங்களைப் பற்றி விசாரிக்கிறார்கள் என்று, சிபிஐ ஐப் பற்றி ஒரு தகவல் வந்துள்ளதே… ஏன் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை… ? டவுசரை கழற்றி விடுவார்கள் என்பதால் தானே… ? நீங்கள் நோட்டீஸ் அனுப்பினாலும் அனுப்பாவிட்டாலும் டவுசரை கழற்றத் தான் போகிறார்கள்.

 

அப்படி சிபிஐ தனது கடமையைச் செய்யத் தவறினாலும், கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் திறந்ததும், பிரசாந்த் பூஷண் உங்களுக்காக ஒரு சிறப்பு மனுவை தாக்கல் செய்வார். கவலைப் படாதீர்கள்.   உங்களின் முடிவு ஆரம்பமாகி விட்டது. உங்களின் ஆக்சிஜனாக இருக்கும் கேபிளை அறுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்க இருக்கிறார்.   அப்போது ஜெயலலிதாவுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறீர்களா… இல்லை காலில் விழுகிறீர்களா என்பதைப் பார்ப்போம்.

Add Comment