தென் மாவட்ட அதிமுக காலியாகும்- அழகிரி

தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் விரைவில் திமுகவுக்கு வரவுள்ளனர்.இங்கு அதிமுக இல்லாமல் போகும் என மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

மதுரை அருகே, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், அதிமுக, மதிமுக, தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த 2000 பேர் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அழகிரி கூறுகையில்,

நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொண்டர்களை அதிகமாக நேசிப்பேன். இந்த பகுதியிலிருந்து முதல்வர் கருணாநிதியை நம்பி, முதலில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வந்தார். அவருக்கு உரிய online pharmacy no prescription மரியாதையை கருணாநிதி கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க.,வை வழி நடத்தும் ஜெயலலிதா, கட்சி பிரமுகர்களை சந்திக்காமல் கோடநாடு எஸ்டேட்டுக்கு ஓய்வுக்கு சென்று விடுகிறார். அவர் சட்டசபைக்கு வருவதில்லை. கட்சி தலைமையகத்திற்கு வந்தால் கூட நோட்டீஸ் அடித்து ஒட்டுகின்றனர். இது போன்ற தொந்தரவுகளை தாங்க முடியாமல் தான், பலர் தி.மு.க.,விற்கு வருகின்றனர்.

தென்மாவட்டங்களில் உள்ள மாற்றுக் கட்சி முக்கிய பிரமுகர்கள், விரைவில், தி.மு.க.வில் இணைய உள்ளனர். ஏழு மாதத்தில் தேர்தல் வரஇருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி கைப்பற்றும் என்றார்.

Add Comment