மஸ்கட் தமிழ்ச் சங்கம் – புதிய நிர்வாகக் குழு 2011 – 13

ஓமான் நாட்டில் உள்ள இந்திய சமூக சங்கத்தின் கீழ் அமைந்துள்ள அனைத்து மொழிசார்ந்த சங்கங்களிலும் மிகவும் அதிக உறுப்பினர்களைக் கொண்டது மஸ்கட் தமிழ்ச் சங்கம். இச்சங்கத்தின் தற்போதய உறுப்பினர்கள் எண்ணிக்கை 680க்கும் அதிகம். அதாவது 2000க்கும் அதிகமான குடும்ப தனி நபர் எண்ணிக்கையையும் கொண்டுள்ளது.

மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டிருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயம்.

மஸ்கட் தமிழ்ச் சங்கம், கலாச்சாரம், சமூகம், இலக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில், இயல், இசை, நாடகம், நாட்டியம், விளையாட்டு, சொற்பொழிவு, சொற்போர், வினாடி வினா மற்றும் பல்வேறு வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகளையும், சிறுவர் சிறுமியர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சங்க உறுப்பினர்கள் அதிக அளவில், பேரார்வத்துடன் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.

மஸ்கட் தமிழ்ச் சங்கம், வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு மாபெரும் நிகழ்ச்சிகளையும் பல வருடங்களாக அரங்கேற்றி வருகிறது. இந்நிகழ்ச்சிகளில் 5000க்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொள்வது பெருமைக்குரிய விஷயம்.டாக்டர் அப்துல் கலாம், அமரர் – எழுத்தாளர் சுஜாதா, அமரர் பூர்ணம் விஸ்வநாதன், கவிப்பேரரசு திரு. வைரமுத்து, பாடகர் திரு. மனோ, பாடகி சுஜாதா, ஆச்சி மனோரமா, பத்மஸ்ரீ திரு. பாலசுப்ரமணியம், சின்னக் குயில் சித்ரா, மாண்டலின் சகோதரர்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜேஷ், நாட்டுப் புறப் பாடல் தம்பதியினர் திரு. குப்புசாமி மற்றும் திருமதி அனிதா குப்புசாமி, பாட்டுக்குப் பாட்டு புகழ் திரு. அப்துல் ஹமீது ஆகியோர், மஸ்கட் தமிழ்ச் சங்கம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை புரிந்த முக்கிய விருந்தினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேலும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு நம் தாய் மொழியான செம்மொழியாம் தமிழ் மொழியைக் கற்பிக்க, வெள்ளிக் கிழமை தோறும் சங்க உறுப்பினர்கள் தன்னார்வத்துடன் தமிழ் வகுப்புகள் நடத்தி வருவது மிகவும் பெருமைக்குரிய ஒரு விஷயம்.

சங்கத்தின் 2011 – 13 பதவிக்கால நிர்வாகக் குழுவிற்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகக் குழுவினரின் விவரங்களும், மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளும் கீழ்கண்டவாறு :

தலைவர் – திரு. ஜானகிராமன் M. K.
உப தலைவர் – திரு. அஹமது ஜமீல்
பொருளாளர் – திருமதி. விஜயலக்ஷ்மி
பொதுச் செயலாளர் / காரியதரிசி – திரு. சுரேஷ்குமார் G.
கலாசாரம் / இலக்கிய செயலாளர் – திரு. பஷீர் முஹம்மது
விளையாட்டு செயலாளர் Buy Cialis Online No Prescription – திரு. ரகு முத்துகுமார் A.
உறுப்பினர் தொடர்பு செயலாளர் – திரு. ஜெயசெல்வன் G.
ஊடகம் / பொதுத் தொடர்பு செயலாளர் – திரு. ராஜசேகரன் M.
மகளிர் தொடர்பு செயலாளர் – திருமதி. விசாலாக்ஷி

புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகக் குழு மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களின் முழுமனதான, பேராதரவிற்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

புதிய நிர்வாகக் குழு, மஸ்கட் தமிழ் சமூகத்திற்கு கருத்தொருமித்த சிறந்த சேவைகளைச் செய்யவும், உறுப்பினர்கள் விரும்பும் முறையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும், சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை இன்னும் மேம்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.

Add Comment