கடையநல்லூர் அருகே ஜேசிபி வாகனம் மோதி இருவர் பலி

கடையநல்லூர் அருகே ஜேசிபி வாகனம் மோதி 2 பேர் பலியாயினர். கடையநல்லூர் அருகேயுள்ள புளியம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (25). மாவடிக்கால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குருசாமி மகன் வரதன் (26). buy Levitra online இவர்கள் இருவரும் நேற்று புளியங்குடி சென்றுவிட்டு பைக்கில் சிங்கிலிபட்டி அருகே வரும்போது அவ்வழியே வந்து கொண்டிருந்த ஜேசிபி வாகனம் பைக் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பலியானார். வரதன் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது வழியில் பலியானார். இச்சம்பவம் குறித்து சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஜேசிபி டிரைவர் கம்பனேரியை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Add Comment