கடையநல்லூரில் மர்மக் காய்ச்சலை தடுக்க 9 மருத்துவ குழுக்கள் : எம்.எல்.ஏ.,தகவல்

கடையநல்லூரில் மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த 9 மருத்துவ குழுக்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பதாகவும், 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட 50 பணியாளர்கள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தொகுதி எம்எல்ஏ செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். கடையநல்லூர் பகுதியில் மர்மக் காய்ச்சல் பாதித்து கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் பலியானதாக கூறப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென கடையநல்லூர் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர அதிமுக செயலாளர் கிட்டுராஜா, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி ஆகியோர் செந்தூர்பாண்டியன் எம்எல்ஏ கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து தமிழக சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயிடம் மர்மக் காய்ச்சல் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ Buy cheap Viagra நேரிடையாக கேட்டுக் கொண்டார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ள அமைச்சர் டாக்டர் விஜய் உத்தரவிட்டதை அடுத்து கொள்ளை நோய் தடுப்பு இணை இயக்குனர் குழந்தைராஜ் நேற்று கடையநல்லூருக்கு வருகை தந்தார். காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து சுகாதார துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து அதனை தடுப்பதற்கான அறிவுரைகளை வழங்கினார். இதனிடையில் தொகுதி எம்எல்ஏ செந்தூர்பாண்டியன் கூறியதாவது:- “”கடையநல்லூர் பகுதியில் மர்மக் காய்ச்சல் பாதித்து 2 பேர் பலியானதாக கூறப்பட்ட புகாரினை அடுத்து சுகாதார துறை அமைச்சரிடம் நேரிடையாக வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து நேற்று அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார துறை கொள்ளை நோய் தடுப்பு இணை இயக்குனர் குழந்தைராஜ், சங்கரன்கோவில் துணை இயக்குனர் கலுசிவலிங்கம், நெல்லை துணை இயக்குனர் மீரான்மைதீன் ஆகியோர் மேற்பார்வையில் 9 மருத்துவ குழுவினர் கடையநல்லூரில் முகாமிட்டுள்ளனர். மேலும் இலத்தூர், வடகரை, சொக்கம்பட்டி, ஆலங்குளம், குருவிகுளம் ஆகிய 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து வட்டார மேற்பார்வையாளர்களும், ஹெல்த் இன்ஸ்பெக்டர்களும் கடையநல்லூரில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள் முகைதீன் அகமது, ரவி, மோதி, தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் 24 மணிநேரமும் உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து வார்டுகளிலும் சுகாதாரத்தினை பேணிக்காத்திடும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றார். எம்எல்ஏவுடன் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கிட்டுராஜா, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, வக்கீல்கள் ஐயப்பராஜா, குட்டியப்பராஜா, எம்எல்ஏ உதவியாளர் குருசாமி உடனிருந்தனர்.

Add Comment