கடையநல்லூர் பாப்பான் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: 22-ல் பணி தொடக்கம்

கடையநல்லூர் பாப்பான்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வருவாய்த் துறை நடவடிக்கை சனிக்கிழமை online pharmacy without prescription தொடங்கியது.

கருப்பாநதி அணையின் முக்கிய கால்வாயான பாப்பான் கால்வாயில் ஆக்கிரமிப்புக்கள் இருப்பதால் தண்ணீர் குளங்களுக்கு சென்று சேருவதில் சிக்கல் நிலவி வருவதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஓடையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புக்கள் குறித்து அளவெடுக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. வருவாய், பொதுப் பணித் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புப் பகுதிகள் அளவிடப்பட்டு, குறியீடுகள் இடப்பட்டன.

இதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதுகுறித்து எம்எல்ஏ பீட்டர்அல்போன்ஸ், தென்காசி எம்.பி. லிங்கம் உள்ளிட்டோரிடம் முறையிட்டனர். அவர்கள் ஆட்சியரிடம், பாதிப்பில்லாத வகையில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், சனிக்கிழமை பாப்பான் கால்வாய் பகுதியை தென்காசி கோட்டாட்சியர் மூர்த்தி, வட்டாட்சியர் பரமசிவன், வருவாய் ஆய்வாளர் ஆதிநாராயணன், பொதுப்பணித் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.ஓடையின் இருபுறமும் 5 அடி அகலத்துக்கு மட்டும் ஆக்கிரமிப்புக்களை அகற்ற உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்களை அளவெடுக்கும் பணி தொடங்கியது. இம் மாதம் 22-ல் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணி தொடங்கும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add Comment