ஜூன் 1-ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது

பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த மத்திய அரசுக்குச் சொந்தமான buy Levitra online இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. தற்போது, லிட்டருக்கு ரூ 1.35 உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை உயர்வு ஜூன் 1-ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதனிடையே, டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்துவது குறித்து ஜூன் 9-ம் தேதி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் குழுவில் ஆலோசனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 வீதம் உயர்த்தி கடந்த மே 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடும்போது இந்த விலை உயர்வு குறைவானதே என்றும், பெட்ரோல் விலையில் ரூ. 5 உயர்த்திய பிறகும் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு லிட்டருக்கு ரூ.4.58 நஷ்டம் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் பெட்ரோல் விலை ரூ 1.35 உயர்த்தப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

Add Comment