கடையநல்லூரில் லாரி மூலம் குடிநீர்வினியோகம் செய்ய நிதி ஒதுக்கீடு

கடையநல்லூரில் கடுமையாக காணப்படும் குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தி இருப்பதாக செந்தூர்பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தார்.கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பிரச்னை கடந்த 10 தினங்களாக காணப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் அமைந்துள்ள 33 வார்டுகளுக்கும் சீராக குடிநீர் சப்ளை மேற்கொள்ள முடியாத நிலையில் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதார பகுதியாக விளங்க கூடிய ஆற்றுப்படுகைகளில் நீர்பிடிப்பும் குறைந்து வருகிறது.இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்திட லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுமென அதிமுக சார்பில் தொகுதி எம்எல்ஏ செந்தூர்பாண்டியனிடம் நகர செயலாளர் கிட்டுராஜா, நகர இளைஞரணி செயலாளர் சுப்பையாபாண்டியன் மற்றும் அதிமுகவினர் வலியுறுத்தினர்.

இதனையடுத்து எம்எல்ஏ செந்தூர்பாண்டியன் கூறுகையில், “”கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை கடையநல்லூர் பகுதியில் ஏற்படாத வகையில் அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் இன்னும் சில மாதங்களில் ஏற்படுத்தப்படும். ஏற்கனவே நகராட்சி பகுதியில் சீரான குடிநீர் கிடைத்திட திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆய்வு பணிகளை நேரிடையாக பார்வையிட்டபோது பணிகளை விரைவாக மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் நகராட்சியில் தற்போது அதிகமான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாக அதிமுக சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் கூறப்பட்டதை அடுத்த லாரி மூலம் வார்டு வார்டாக குடிநீர் வினியோகம் செய்திடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிக்காக மாவட்ட நிர்வாகம் குடிநீர் வினியோகத்தினை கருத்திற்கொண்டு நகராட்சி நிர்வாகத்திற்கு சிறப்பு நிதி online pharmacy without prescription ஒதுக்கீடு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றார்

Add Comment