குற்றாலத்தில் சீசன் தொடங்கியது-அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

தென்னகத்தின் ஸ்பா எனப்படும் குற்றாலத்தில் சீசன் இன்று தொடங்கியது. காலை முதல் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

தென் மேற்குப் பருவ மழை தொடங்கும் சமயத்தில்தான் Buy Amoxil குற்றாலத்திலும் சீசன் தொடங்கும். தற்போது கேரளாவிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பருவ மழை தொடங்கியுள்ளது. இதையடுத்து குற்றாலத்தில் சீசன் தொடங்கி களை கட்ட ஆரம்பித்துள்ளது.

இன்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ரம்மியமான சூழ்நிலையும் நிலவி வருவதால் மக்கள் சீசனை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்.

தென் மேற்குப் பருவ மழை அதிகரிக்கும்போது சீசன் மேலும் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment