கடையநல்லூரி்ல் மர்ம காய்ச்சலுக்கு இருவர் பலி: மக்கள் பீதி

கடையநல்லூரில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இது வரை மர்ம காய்ச்சலுக்கு இருவர் பலியாகியுள்ளனர்.

கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் வெளிநாட்டில் பணிபுரிந்து விடுமுறையில் ஊருக்கு வந்த இப்ராஹீம் என்பவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். இதே போல் பவுசியா என்ற கர்ப்பிணி பெண்ணும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கடையநல்லூர் மாவடிக்கால் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. கடையநல்லூர், தென்காசி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிக்சைக்காக Ampicillin online நெல்லை அரசு மருத்துவமனைக்கு கருப்பசாமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதையடுத்து சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

Add Comment