சமுதாய கண்மணிகளே உங்கள் கவனத்திற்கு

அன்பிற்குரிய இனிய இஸ்லாமிய சகோதர , சகோதரிகளே !

வளர்ந்து வரும் விஞ்சான உலகில் எத்தனை பல நன்மைதரக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன .அதில் ஒன்று இன்டர்நெட் .இந்த இண்டர்நெட்டை பயன்படுத்தி பத்திரிக்கைகள் ,இஸ்லாம் சம்பந்தப்பட்ட நல்ல விஷயங்கள் தரக்கூடிய இணைய தளங்கள் உள்ளன . மட்றும் ஈமெயில் எனும் தகவல் பகிர்ந்துகொள்ளும் வசதிகளும் உள்ளது.இந்த தகவல் பகிர்ந்துகொள்ளும் முறைகளில் இயங்கி வரும் இணைய தளங்கள் FACEBOOK ஆகும் .

இதில் எந்த செய்தி வேண்டுமானாலும் நாம் நமது நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்து வருகிறோம் . இதில் நமது இஸ்லாமிய நண்பர்கள் FACEBOOK -ல் கணக்கு வைத்திருப்பவர்களாக இருந்தால் தயவுசெய்து நமக்கு தெரியாத நண்பர்களோ அல்லது மாற்றுமத நண்பர்களோ,மாற்று மொழி பேசும் நண்பர்களோ இருந்தால் தயவுசெய்து எனது சமுதாய கண்மணிகளே உங்கள் இணைப்புகளில் உள்ள அவர்களது பெயரை கண்டிப்பாக நீக்கி விடுங்கள் .ஏனென்றால் நாம் அனைவரும் இஸ்லாம் சம்பந்தமான நல்ல பல விசயங்களை பகிர்ந்துகொள்ளும் போது இஸ்லாம் அல்லாத நண்பர்களுக்கும் சென்றடைகிறது .அது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தவறான வார்த்தைகளை பயன்படுத்தி கருத்துகளை எழுதுகிறார்கள் .

ஆகையால் நாம் ஏன் அது மாதிரியான நண்பர்களை நமது இணைப்புகளில் வைத்திருக்கவேண்டும் . இஸ்லாம் அல்லாதவர்கள் இதை பார்த்தார்கள் என்றால் அவர்களுக்கு இஸ்லாத்தைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது .எனவே எல்லோரும் இப்பொழுதே உங்களுடைய கணக்கில் உள்ள இஸ்லாம் அல்லாத நண்பர்களை நீக்கம் செய்து இஸ்லாத்தை பற்றிய தவறான விமர்சனம் உருவாவதை தவிர்ப்போம் . மாற்றுமத சகோதரர்களே இஸ்லாம் சம்பந்தமாக உங்களுக்கு எதாவது சந்தேகம் buy Amoxil online இருந்தால் உங்களுடைய இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் .அதைவிடுத்து தவறான வார்த்தைகளால் விமர்சனம் செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . இதில்,இஸ்லாம் சம்பந்தப்பட்ட நல்ல விஷயங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள் இதை பயன்படுத்தி இம்மை மறுமைகாக பாடுபடுங்கள் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக
ஆமீன் ஆமீன் ஆமீன்!!!!!!!!!!!!!

ALELITE ASS KDNL

 

Add Comment