மதங்கள் என்னும் மலம் பூசிக்கொள்ள மனம் இல்லை என்ற செங்கொடிக்கு முஸ்தபா கமாலின் பதிலுரை

மதங்கள் என்னும் மலம் பூசிக்கொள்ள மனம் இல்லை என்று மனம் திறந்து சொல்லியிருக்கிறார் செங்கொடி. வாழ்த்துக்கள். ஏற்கெனவே கம்யூனிசம் என்ற மலத்தை அவர் மனம் முழுவதும் பூசிக்கொண்டவர் அதுவே பொன்செய்யும் மருந்தென்று போதுமாக்கிக் கொண்டார் போலும் ! அவர் ஒன்றை விளங்கிக்கொள்வது நல்லது. இஸ்லாம் ஒரு மதம் அல்ல !; அது ஒரு வாழ்க்கை திட்டம்.
அதைக் கைக்கொண்டவர் கதிமோட்சம் அடைவர். கைவிட்டவர் மலம் பூசிக் கொள்வர். செங்கொடி இஸ்லாத்தை கைவிட்ட காரணத்தால் மலம் பூசிக்கொண்டு மனம் போன போக்கில் இஸ்லாத்திற்கெதிராக ஏதேதோ பேசுகிறார் !

இஸ்லாத்தை அகழ்ந்து ஆராய்ந்த பிற மத அறிஞர்கள் விரிந்த கண்களோடு வியப்பின் எல்லைகே சென்றுள்ளனர். மட்டுமன்று. இஸ்லாம் என்ற அத்தரை மனசில் பூசி மகிழ்ந்திருக்கிறனர் ! செங்கொடி போன்ற காலாவதியான கம்யூனிசவாதிகள் ஒரு நான்கு வார்த்தைகளை நாவின் நுனியில் வைத்துக்கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்கம் , முதலாளித்துவம், வர்க்கபேதம் , சமத்துவ சமுதாயம் என்ற நான்கு வார்த்தைகளில் தான் அவர்களின் பிழைப்பே ஓடிக்கொண்டிருக்கிறது ! இஸ்லாத்தின் அடிப்படையை அறியாத காரணத்தினால்தான் ஆணாதிக்கம், பெண்ணடிமை என்றெல்லாம் பேசித்திரிகிறார்கள். இஸ்லாம் என்ன பெண்ணடிமை வேண்டுமென்று பேசுகிறதா ? ஆணாதிக்கம் அவசியம் என்று அறைகிறதா ? இல்லை ! இல்லவே இல்லை ! !

பெண்களின் அடிமைத் தளையை அடித்து நொறுக்கியது இஸ்லாம் மட்டும்தான் ! விதைவை மறுமணத்தை சட்டமாக்கியது சத்திய இஸ்லாம்தான் ! காட்டுமிராண்டிகளின் வீட்டுப் பெண்கள் கழுத்து நெறிக்கப்பட்டு புதைக்கப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு வாழ்வளித்தது இஸ்லாம் தான். இன்றைய உலகில் பெண்கள் மாற்றம் பெற்று ஏற்றம் அடைந்திருப்பது இஸ்லாத்தினால்தான் !

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத , இஸ்லாத்திலிருந்து புறம் போய்விட்ட புறம்போக்குகளால் இஸ்லாத்தின் கொடி என்றும் தாழ்ந்துவிடாது !

ஆணாதிக்கம் என்று தோழர் செங்கொடி தொட்டுச் சொல்வது எதனை என்று அவர் விளக்கிச் சொல்லவேண்டும் !

ஒரு பெண்ணை கட்டுப்பாடுடன் வாழச் சொல்வது ஆணாதிக்கமா ? கண்டபடி மேயச் சொல்வது சுதந்திரமா ? பகலில் பத்துப் பேருடன் பழகிக் கொள்; இரவில் என்னோடு உறவுடன் இரு என்று சொல்வதுதான் சமத்துவமா ? பெண்ணுக்கென்று சில எல்லைக் கோடுகள் உண்டு . அதைத் தாண்டினால் கண்டிக்கவும் தண்டிக்கவும் Buy Ampicillin Online No Prescription ஆணுக்கு உரிமை உண்டு. இந்த உரிமையை ஆணாதிக்கம் என்று சொன்னால் அது அறிவுடைமை ஆகுமா ? இஸ்லாம் என்ற வேலிக்கு உள் வந்துவிட்டால் ஆணும் சரி பெண்ணும் சரி கட்டுப் பட்டுத்தான் வாழவேண்டும். கட்டுப்பாடு இல்லாதது வாழ்க்கை இல்லை. களைக்கூத்தாடிக்கும் விளையாட்டு வீரர்க்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு.

தன் வீட்டுப் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து கட்டுப்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டு எப்படியும் வாழ்ந்துகொள் என்று சுதந்திரம் கொடுப்பது ஒரு ஆணுக்கு அழகா ? தாய் தந்தையர்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பிள்ளைகளை வளர்ப்பதால் தான் ஒழுக்கம் கெட்டு ஓடிப்போவோரின் லிஸ்ட்டில் சில பெண்கள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். இது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்த கதையல்லவா ?

ஆண் பெண்ணுக்கு ஆடை; பெண் ஆணுக்கு ஆடை என்று பேசுகிறது பேரிறையின் திருமறை ! ஒருவர் மானத்தை ஒருவர் மறைத்து ஊடையும் பாவும்போல் ஒன்றறக் கலந்து உறவு கொண்டு வாழ வேண்டுமென்ற உன்னதமான சமத்துவ நெறியை உலகுக்கு உணர்த்துவது இஸ்லாம் மட்டும்தான் ! நேற்றுப்பிறந்து இன்று மடிந்து கொண்டிருக்கும் கம்யூனிசம் சாற்றியது என்ன தோழா ? சாதித்து தான் என்ன ?

ஒரு குடும்பத்தில் முடிவு எடுக்க வேண்டிய அதிகாரியாக ஒரு ஆண்தான் இருக்க வேண்டும் . அதுவல்லாமல் பெண்ணுக்கு அந்த அதிகாரம் போய்ச் சேர்ந்தால் அந்த வீட்டு ஆணுக்கு நமதூரில் என்ன பெயர் தெரியுமா ? பொண்ணப் பயல் ! ஆணாதிக்கம் என்று ஆர்ப்பரிக்கும் செங்கொடி கூட அவர்தம் வீட்டில் பொண்ணையன் தானா ?

வளர்த்தெடுப்பதிலும் வார்த்தெடுப்பதிலும் தவறுகின்ற பெற்றோரே தங்கள் பிள்ளைகளை வேலி தாண்டும் வெள்ளாடு களாக்கிவிடுகிரார்கள்.

இஸ்லாமிய வேலியைத் தாண்டி துள்ளாட்டம் போடும் சென்கொடிக்கும் கற்பு என்னும் வேலியைத் தாண்டி கண்டவனோடு ஊர்சுற்றும் பெண்ணுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
இருவரையும் வளர்த்தவர்கள் இஸ்லாமிய நெறிப்படி வளர்த்திருந்தால்
படி தாண்டி இருக்கமாட்டார்கள் ! படி தாண்டும் பெண்ணும் கொடி தூக்கும் செங்கொடியும் சொல்வது என்னவோ சுதந்திரம் என்று.
சுதந்திரத்தின் பொருளை சுத்தமாக அறியாத காரணத்தால். ஒருவர் ஒரு மதத்தில் இருப்பதற்கும் வெளியேறுவதற்கும் உரிமை உண்டு ! மறுக்கவில்லை. ஆனால் தான் பிறந்த மார்க்கத்தை தவறுதலாகப் புரிந்து கொண்டு தர்க்கம் செய்கிறேன் பேர்வழி என்று தரக் குறைவாக விமர்சிக்க செங்கொடி போன்ற வம்படிபேர்வழிகளுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலோட்டமாக இஸ்லாத்தைப் படித்தறிந்து விட்டு சம்பாதிப்பதற்காக முஸ்லிம் என்ற பெயர் தாங்கி கொண்டு இரட்டை வாழ்க்கை வாழுவதை விட கேவலமான ஒரு செயல் இருக்க முடியாது !

சத்தியமும் பத்தியமும் நிறைந்தது இஸ்லாமிய மார்க்கம் ! அதிலிருந்து கற்றும் பெற்றும் வாழத் தகுதி இல்லாத சென்கொடிக்காக
அனுதாபப் படுகிறேன்.

பீ. எம். கமால்

Add Comment