உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க

தினமும் ஆங்கில அகராதியைக் கையில் வைத்துக் கொண்டு ஆங்கில வார்த்தை படிப்பதைவிட விளையாட்டான சவால் மூலம் நாம் எளிதாக பல ஆங்கில வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் தெரிவித்து அதைப்பற்றிய சிறு குறிப்பையும் கொடுத்து அது பெயர்ச்சொல்லா அல்லது வினைச்சொல்லா என்பதையும் தெரிவித்து அது எந்த வார்த்தை என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இப்படி நமக்கு ஆங்கில சொற்களின் அறிவை வளர்க்க ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Click here to Start என்பதை சொடுக்கி சவாலுக்கு தயாராகலாம். முதல் எழுத்தை வைத்து வார்த்தை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இதற்கான கால அளவு 1 நிமிடம் தான் அதற்குள் கொடுக்கப்பட்டிருக்கும். எழுத்திற்கு சரியான வார்த்தையை தட்டச்சு செய்தால் போதும்.

நாம் தட்டச்சு செய்திருக்கும் வார்த்தை சரியாக இருக்கும் பட்சத்தில் நமக்கு Score என்பதில் நமக்கு மதிப்பெண் கிடைக்கும். நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நம் மதிப்பெண்ணை சேமித்தும் வைக்கலாம்.

ஒரு வார்த்தை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாம் Skip என்ற பொத்தானை சொடுக்கி அடுத்த வார்த்தைக்கான முதல் எழுத்தை பார்க்கலாம். பொழுதுபோக்கு நேரத்தில் இது போன்ற பயனுள்ள விளையாட்டின் மூலம் நம் ஆங்கில சொற்களஞ்சியத்தின் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

இணையதள முகவரி

Amoxil online x-small;”>http://www.knoword.org/

Add Comment