செல்போனில் பேசினால் புற்றுநோய் வரும்-‘ஹூ’ எச்சரிக்கை

மணிக்காக செல்போனில் பேசுபவரா? அப்படியெனில் உங்களை மூளைப்புற்று நோய் தாக்கக்கூடும் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார மையத்தின் அங்கமாக உள்ள சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்வில் நடத்தப்பட்ட ஆய்வில், செல்போன் பயன்படுத்துவதன் மூலம் பரவும் கதிரியக்கத்தால் மூளை புற்றுநோய் ஏற்படுகிறது என்ற திடுக்கிடும் உண்மை தெரியவந்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பு

தினமும் அரைமணிநேரம் ‌மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் பாதிக்கும் தன்மை 3 மடங்கு அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் பயன்படுத்துவோருக்கு இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கும் எனவும், அவர்களுக்கு மூளை கட்டி உருவாகும் வாய்ப்பு அதிகம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் பேர் உயிரிழப்பு

கடந்த 10 ஆண்டுகளில் 13 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 5000 பேர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இளம் வயதினர் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக மொபைல் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மூளை கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு நரம்பு கோளாறு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கதிர்வீச்சின் தாக்கம் குழந்தைகளையும் அதிகம் பாதித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களை விட இந்தியாவில் இருப்பவர்களுக்கு செல்போன் கதிரியக்க பாதிப்பு அதிகம் தாக்குகிறது. இதற்கு நம் நாட்டில் நிலவும் வெப்பமான சூழலும், உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து குறைவே காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். புற்றுநோய் தவிர மறதி, தூக்கமின்மை, அஜீரணம் போன்றவையும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்

மலிவான செல்போன்களுக்குத் தடை

செல்போன் பயன்படுத்தும்போது வெளியாகும் கதிர்வீச்சு விஷயத்தில் மனித உடலில் ஊருடுவும் ரேடியோ அலைகளின் அளவுக்கு (ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேடி & எஸ்ஏஆர்) கட்டுப்பாடு உள்ளது. அதைப் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் மலிவான செல்போன்களை தடை செய்ய வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.

செல்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால் செல்போனை தலைக்கு அருகில் கொண்டு செல்லாமல் ஹெட்போனை பயன்படுத்தலாம் Amoxil No Prescription என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்

Add Comment