கடையநல்லூர் பகுதியில் இன்று முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா

கடையநல்லூர் ஒன்றிய பகுதிகளில் திமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்த நாளை இன்று (3ம் தேதி) சிறப்பாக கொண்டாட ஒன்றிய திமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடையநல்லூர் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் சேதுநாயக்கர் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை, ஒன்றிய பொருளாளர் கருப்பையா, மாவட்ட பிரதிநிதிகள் செல்வராஜ், தங்கமணி, கருப்பணன், ஒன்றிய பிரதிநிதி சுப்பிரமணியன், முத்துவேல், சுபாஷ் சந்திரபோஸ், முத்துக்கிருஷ்ணாபுரம் குமார், கரடிகுளம் காளிராஜ் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 88வது பிறந்த நாள் விழாவை இன்று (3ம் தேதி) கடையநல்லூர் ஒன்றிய பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுவதுடன், அனைத்து கிளை கழகங்களிலும் திமுக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிட தீர்மானிக்கப்பட்டது. கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் அருகில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையில் வரையப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் Levitra No Prescription ஆகியோரது படங்களை அழித்திட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கடையநல்லூர் தொகுதியில் திமுக,-காங்., கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பீட்டர் அல்போன்சிற்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கடையநல்லூரில் வேகமாக பரவி வரும் மர்மக் காய்ச்சலை தடுப்பதற்கும், உயிர் பலிகளை தடுத்திடவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தாமல் இருந்து வரும் தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Add Comment