கடையநல்லூர் பகுதியில் மர்மக் காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை : சுகாதார துறை அதிகாரி தகவல்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மர்மக் காய்ச்சலை தடுத்திட சுகாதார துறை மூலமாக 25க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதாக சுகாதார துறை பணிகள் துணை இயக்குனர் கலுசிவலிங்கம் தெரிவித்தார். கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் குறிப்பிட்ட சில வார்டுகளில் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதுடன் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கையும் 3ஐ எட்டியுள்ளது. இந்நகராட்சியில் மர்மக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட சுகாதாரம், மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொகுதி எம்எல்ஏ செந்தூர்பாண்டியன் மர்மக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கையும் எடுக்க Buy Lasix வேண்டும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயிடம் நேரிடையாக வலியுறுத்தியதன் அடிப்படையில் கடையநல்லூர், குருவிகுளம், ஆலங்குளம், வடகரை, இலத்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார துறை டாக்டர்களும், சுகாதார பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் கடையநல்லூரில் முகாமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதார துறை இணை இயக்குனர் கலுசிவலிங்கம் கூறியதாவது:- “”கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மர்மக் காய்ச்சலால் மக்கள் எந்தவித அச்சமும், பீதியும் அடைய வேண்டாம். காய்ச்சல் பரவும் முறைகளை கண்டறிந்து அதனை தடுக்கும் முயற்சியில் சுகாதார துறையினரும், நகராட்சி நிர்வாகத்தினரும் இணைந்து தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். தற்போது இந்த காய்ச்சல் தொடர்பான சோதனைகளை கண்டறியும் பணிகளில் 50க்கும் மேற்பட்ட சுகாதார துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி கவுன்சிலர்களுக்கு வீடியோ கான்பரசிங் மூலம் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Add Comment