சமச்சீர் கல்வி பாடத்திட்டம்:மறுஆய்வு செய்ய அரசு முடிவு

சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் இன்று ஆளுனர் உரையில் சமச்சீர் கல்வி பற்றி வெளியான அறிவிப்பு:

தரமான பள்ளிக் கல்வியை இலவசமாக அனைவருக்கும் வழங்குவது இந்த அரசின் முக்கிய
கொள்கைகளில் ஒன்றாகும்.

முக்கிய கல்வி சார்ந்த குறியீடுகளான Buy Amoxil Online No Prescription பள்ளிச் சேர்ப்பு விகிதத்தை அதிகரித்தல், இடை நிற்றலைக் குறைத்தல் போன்றவற்றுடன் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.

சமச்சீர் கல்வி என்ற பெயரில் பள்ளிக் கல்வியின் தரத்தைக் குறைத்து அதனால் மாணவர்களின்
எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதை இந்த அரசு விரும்பவில்லை.

பள்ளிக் கல்விமுறை மாணவர்களின் செயல்முறை அறிவாற்றலையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மாணவர்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் உருவாக்க இந்தக் கல்வி முறை வகை செய்யவேண்டும்.

ஆனால், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்டம் இந்த நோக்கத்தை எய்த போதுமானதாக இல்லை.

எனவே சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.

Add Comment