அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.

கடந்தமுறை மைனாரிட்டி அரசாக இருந்த தி.மு.க. இந்த முறை மைனாரிட்டி கட்சியாக மாறிவிட்டது. எதிர்க்கட்சி நாற்காலியையும் விஜயகாந்த் பறித்துக் கொண்டதால், அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க., சட்டமன்றத்தில் தன்னுடைய கட்சி அந்தஸ்தையும் இழந்து குழுவாக மட்டுமே செயல்பட முடியும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. 119 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், ஸ்டாலின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவை விதிமுறையை மீறிய செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை விதி எண் 2-ன் படி, மொத்த சட்டப் பேரவை உறுப்பினர்களில் பத்து சதவிகிதம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு மட்டுமே சட்டசபையில் கட்சி அந்தஸ்து கொடுக்கப்படும். அந்த வகையில் தமிழக சட்டமன்றப் பேரவையில் கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு ஒரு கட்சி இருபத்து நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இருபத்து நான்கு உறுப்பினர்களுக்குக் கீழே, எட்டுப் பேருக்குக் குறையாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அணியை சட்டமன்றக் குழு என்றுதான் அழைக்க வேண் டும். அதன்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு பொதுச்சின்னம் வழங்கப்பட்ட கட்சியாக இருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறைவான எண் ணிக்கையே தி.மு.க கொண்டிருப்பதால் அதனை சட்டமன்றக் குழு என்றுதான் அழைக்க வேண்டும்.

கடந்த முறை முப்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்ததால் காங்கிரஸ் Buy Doxycycline Online No Prescription ‘கட்சி’ என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது. தற்போதைய தேர்தல் முடிவின்படி தே.மு.தி.க. வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் சட்டமன்றக் கட்சி என்ற அங்கீகாரத்தை பெற முடியாது.

இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்கடந்த 25-ம் தேதி கருணாநிதி தலைமையில் நடந்தது, இக்கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஸ்டாலின், துணைத் தலைவராக துரைமுருகன் கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதன்மூலம் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பிற்கு ஸ்டாலின்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.

ஆறாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்பட்ட கருணாநிதிக்கு சட்டப்பேரவை விதிகள் தெரியாமல் போனது ஆச்சரியம்தான் என்கிறார்கள் முன்னாள் பேரவைத் தலைவர்கள்.

ஒற்றன்

Add Comment