குற்றாலத்தில் குளித்துவிட்டு திரும்பிய போது விபத்து

தென்காசி அருகே கார் – ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் 6பேர் பரிதாபமாக இறந்தனர். 5பேர் படுகாயமடைந்தனர். ஒரே தெருவை சேர்ந்த 6பேர் சம்பவ இடத்திலேயே பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தென்காசி கீழப்பாறையடித்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுந்தர் (22), முத்து மகன் ராஜாமணி (28), பிச்சையா மகன் செந்தில் (26), மூக்கையா மகன் கதிரேசன் (28), சுப்பிரமணி மகன் சண்முகதாஸ் (24), ராமசுப்பிமரணியன் மகன் கார்த்திக் (24), சண்முகதாஸ், மூக்கையா மகன் கதிரேசன், ஐயப்பன், இசக்கிதாஸ் ஆகிய 8பேரும் கூலிவேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பழையகுற்றாலத்தில் குளித்து விட்டு நேற்று மாலை 5 மணிக்கு தென்காசி நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதை பார்க்க விநாயக செல்வி (35), மகேந்திரன் (40) சிறுவன் ஆகிய 3பேரும் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் கண்ணன் (35) என்பவர் ஓட்டி வந்தார். மத்தளம்பாறை ரோட்டில் உள்ள சித்தர் கோட்டம் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக காரும் – ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு சின்னாபின்னமானதில் ஆட்டோவில் இருந்த 8பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் 3பேர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதில் வழியில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ஐயப்பன் தீவிர சிகிச்சைக்காக பாளை., அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இசக்கிதாஸ் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவறிந்ததும் நெல்லை மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதரி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். விபத்தில் பலியானவர்களின் உடலை பார்வையிட்டார். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கார் டிரைவர் மற்றும் ஐயப்பன், பெண் ஒருவர் ஆகியேரிடம் விபரம் குறித்து கேட்டறிந்தார். விபத்து குறித்து குற்றாலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி விபத்தில் பலியான 6பேரின் உடலையும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தென்காசி டிஎஸ்பி ஸ்டாலின் மேற்பார்வையில் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை உட்பட ஏராளமான போலீசார் வந்திருந்தனர்.

உறவினர்கள் கதறல்-டாக்டர் முற்றுகை : நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் யார் உயிருடன் இருக்கிறார்கள். யார் இறந்துள்ளனர் என்று முடிவு செய்வதில் தாமதம் ஆனது. இதனால் buy Amoxil online உறவினர்கள் கதறி அழுதவண்ணம் இருந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 108 ஆம்புலன்சிற்கு போன் செய்தும் வர நேரமானதால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களில் ஒரு சிலர் பரிதாபமாக இறந்ததாக உறவினர்கள் போலீசாரிடம் புகார் கூறினர். அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் இல்லாததால் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் பணியில் இருந்த ஒரு டாக்டரையும் முற்றுகையிட்டனர். அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மாவட்ட எஸ்பியிடம் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஊர்பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து புகார் மனு அளித்தனர். புகார் மனு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என கூறிய மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதரி சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஊர்பொதுமக்கள் அனைவரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Add Comment