குற்றாலத்தில் சீசன் ஜோர் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

குற்றாலம் பகுதியில் சாரல் மழை தீவிரமடைந்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் குதூகலமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 4 தினங்களாக சாரல் மழை நீடித்து வருவதால் அருவிகளில் படிப்படியாக தண்ணீர் அதிகரித்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு முதல் தண்ணீர் அதிகரித்து பாதுகாப்பு வளைவு பகுதியை தாண்டி விழுகிறது. அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் Buy Amoxil எண்ணிக்கை வழக்கத்தை விட நேற்று அதிகளவில் காணப்பட்டது.

ஐந்தருவியின் 5 கிளைகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பழைய குற்றாலத்தில் தண்ணீர் குறைவாக விழுந்த நிலையில் நேற்று இரவு பெய்த சாரல் மழை காரணமாக தண்ணீர் சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. புலியருவியில் அதிகமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலின்றி உற்சாகமாக குளித்து மகிழந்தனர்.

குற்றாலம் பகுதியில் நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மிதமான சாரல் மழை பெய்தது. பின்னர் மதியம் 3 மணி வரை லேசான வெயில் அடித்தது. பின்னர் மாலை 4 மணிக்கு பின் இரவு முழுவதும் சாரல் மழை நீடித்தது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக காணப்படுகிறது.

Add Comment