குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க 10மணிநேரம் தடை

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 10 மணிநேரம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. குற்றாலத்தில் சீசன் துவங்கி சுமார் 4 நாட்களுக்கும் மேலாகிறது. கேரளாவில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் குற்றாலம் மலைப்பகுதியில் சாரல்மழை தீவிரமடைந்து மலையின் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து தண்ணீர் அதிகளவில் அருவிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு சாரல்மழையின் தீவிரத்தால் குற்றாலத்தில் பிரதான அருவியாக விளங்கும் மெயின் அருவியில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் தண்ணீர் படிப்படியாக கூடியது. சுமார் 10 நிமிடத்திற்குள்ளாக அருவியில் தண்ணீர் அதிகரிப்பதை கண்டு சுதாரித்து கொண்ட சுற்றுலா பயணிகள் அருவியை விட்டு தள்ளியே நின்றனர். நேரம் செல்ல செல்ல தண்ணீர் பாதுகாப்பு வளைவு பகுதியையும் தாண்டி விழத்துவங்கியது. ர்ப்பரித்து விழும் தண்ணீருடன் கற்கள், சிறிய மற்றும் பெரிய மரக்கிளைகள், மண் உள்ளிட்டவை கலந்து வந்ததால் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி சுமார் 10 மணிநேரம் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. அருவியில் குளிக்க முடியாவிட்டாலும் அருவியில் ஆர்ப்பரித்து விழும் அழகையும் தூரநின்றவாறு ரசித்தும், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் மதியம் 12 மணியளவில் தண்ணீர் ஓரளவு குறைந்ததும் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். பழையகுற்றாலத்திலும் அதிகளவில் தண்ணீர் வந்ததால் அங்கும் ஒரு சில மணிநேரம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருகில் இருந்த தடாகத்தில் உற்சாமாக குளித்து வந்தனர். குற்றாலம் மெயின் அருவி, பழையகுற்றாலத்தில் குளிக்க அனுமதிக்கப்படாததால் ஐந்தருவி, புலியருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா Buy Doxycycline பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகளவிலேயே காணப்பட்டது. ஐந்தருவியின் 5 கிளைகளிலும் தண்ணீர் அதிகளவில் விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வந்தனர். குற்றாலம் பகுதியில் நேற்று காலை முதல் மாலை அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மதியம் 1 மணி முதல் 4 மணிவரை மிதமான வெயில் அடித்தது. மாலை 6 மணி முதல் சாரல் மழையுடன் குளிர்ந்த காற்று வீசியது. மலைப்பகுதியில் சாரல் மழை தீவிரமாக காணப்படுகிறது.

Add Comment