வக்பு வாரிய சொத்துக்களை அரசு உடனே மீட்க வேண்டும் : ம.ம.க.வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை அரசு உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.ம.க.வலியுறுத்தியுள்ளது. தென்காசியில் ம.ம.க.பொது செயலாளர் அப்துல் சமது நிருபர்களிடம் கூறியதாவது:
“”அ.தி.மு.க.தலைமையிலான கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபையில் முதன் முதலாக ம.ம.க.வை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 3ம் தேதி கவர்னர் சட்டசபையில் உரையாற்றினார். தேர்தல் பிரசாரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றும் வகையில் கவர்னர் உரை இருந்தது. சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைத்துள்ளதை வரவேற்கிறோம். சிறுபான்மை மொழிக்கும் முக்கியத்துவம் அளித்து சமச்சீர் கல்வி திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். கேபிள் “டிவி’ அரசுடைமையாக்கப்படும் என்பதை வரவேற்கிறோம். பசுமை வீடு திட்டம், சூரிய ஒளியில் மின்சாரம் பெறுவதை வரவேற்கிறோம். 500 பேர்கள் இருக்கும் பகுதிக்கு தார் ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்தது. அதனை நீக்க வேண்டும். மத்திய அரசு முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் வக்பு வாரிய சொத்துக்களை அரசு உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பல மீனவர்களை இலங்கை ராணுவம் கொலை செய்துள்ளது. இது போன்ற செயல் எதிர்காலத்தில் நடக்காமல் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி சட்டசபையில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வலியுறுத்துவார். ஆம்பூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அத்தொகுதி எம்.எல்.ஏ.பாடுபடுவார். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு எழுத, படிக்க தெரிந்தால் போதும் என சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். பெட்ரோல், டீசல், Buy cheap Amoxil மண்ணெண்ணெய், காஸ் விலை உயர்ந்து வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும். தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். தென்காசி போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரித்து டவுன் போலீஸ் ஸ்டேஷன், புறநகர் போலீஸ் ஸ்டேஷன் என அமைக்க வேண்டும். தென்காசியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்காக உபகரணங்கள் மற்றும் சி.டி.ஸ்கேன் வசதி அமைக்க வேண்டும். போதுமான டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்க வேண்டும்” என அப்துல் சமது கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான், மாவட்ட செயலாளர் நயினார் முகம்மது, மாவட்ட நிர்வாகிகள் சுலைமான், சங்கை திவான் மைதீன், இஸ்மாயில், யாகூப், செய்யது அலி, கவுன்சிலர் முகமமது அலி, பீர்பாத்து, கோதர் பாவா, தென்காசி சலீம், அஷ்ரப், மைதீன், வாப்பா சேட் உடனிருந்தனர்.

Add Comment