தேர்தல் தோல்வி: திமுக-வின் வலிமை அதிகரிக்கும்: கருணாநிதி

தேர்தல் தோல்வி: திமுக-வின் வலிமை அதிகரிக்கும்: கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று (ஜுன் 5) இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசுகையில், 56, 67-ல் நடந்த தேர்தல்களில் நான் இங்கு போட்டியிட வேண்டும் என்று விரும்பினாலும், அப்போது இருந்த அரசியல் பிரமுகர்கள் வேண்டும் என்றே இந்த தொகுதியை தனித்தொகுதியாக Amoxil No Prescription ஆக்கி போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள்.

அதன் காரணமாக இவ்வளவு காலம் காத்திருந்து போட்டியிட்ட என்னை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளீர்கள். நான் நீங்கள் விரும்பியபடி முதல்- அமைச்சராக ஆகவில்லை என்றாலும் உங்கள் எம்.எல்.ஏ.வாக ஆகி விட்டேன். ஒரு எம்.எல்.ஏ.வாக செய்ய வேண்டிய பணியை உங்களுக்கு நான் நேரடியாக ஈடுபட்டோ அல்லது தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களை வைத்தோ செய்து தருவேன் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்.

தி.மு.க. இந்த தேர்தலில் தோற்று விட்டது என்று யாராவது சொன்னால் நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது தோற்பது திராவிட இயக்கத்தின் உணர்வு, கொள்கைகள் அல்ல. அவைகளை மேலும் கூர்மைப்படுத்தி, வலிமைப்படுத்த இந்த தோல்வி அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

புதிய ஆட்சி வந்துள்ளது எனப் பலர் கூறுகிறார்கள். அந்த ஆட்சி வெளியிட்ட ஆளுநர் உரையைப் படித்துப் பார்த்தேன். அதை அச்சுப்பிழையின்றி தயாரிக்கக்கூட இந்த ஆட்சியால் முடியவில்லை. அதில் பேரறிஞர் என்பது பேராறிஞர் என்று அச்சிட்டுள்ளனர். மேலும், தங்களை அறியாமலேயே ஓர் உண்மையையும் குறிப்பிட்டுள்ளனர். அது என்னவெனில், இந்தப் புதிய அரசும் ஏழை, எளிய மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் என்பதுதான். அப்படி என்றால், முந்தைய அரசு (திமுக அரசு) அப்படி இருந்துள்ளது என்பதுதானே பொருள். இதைப் பிழை என்று கருதாமல் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்.

அதே உரையில், கடந்த ஆட்சியில் பயமுறுத்தி சேர்க்கப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டு, மீண்டும் உரியவர்களிடம் சேர்க்கப்படும். அதற்கென புதிய சட்டம் இயற்றப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிறுதாவூர் நிலமும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்படுமென நம்புகிறேன்.

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், செம்மொழி மைய அலுவலகம், நூலகம் ஆகியவை தற்போது எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. இதுதான் தமிழை உலகறியச் செய்யும் செயலா என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் கட்டிய புனித ஜார்ஜ் கோட்டையிலேயே எவ்வளவு காலத்துக்கு சட்டப்பேரவையை நடத்துவது என்பதற்காக புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதைப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். அனைவராலும் பாராட்டப்பட்ட, கட்டடத்தின் புகழை நசுக்க வேண்டும், சீரழிக்க வேண்டும் என்பதற்காக பழைய கட்டடத்திலேயே சட்டப்பேரவை செயல்பட இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாற்றம் வேண்டும் என்பது காலங்காலமாக கூறி வருவதுதான். அந்த மாற்றம் மீண்டும் ஏற்படும்.

புதிய ஆட்சி ஏற்பட்டும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, ரவுடியிசம் நடைபெற்று வருகிறதே? எந்த ஆட்சியிலும் இது தவிர்க்க முடியாதது. இவற்றைத் தடுத்து பாதுகாக்கத்தான் காவல் துறை இருக்கிறது. திமுக ஆட்சியை விமர்சித்து எழுதிய நாளேடுகள், வார ஏடுகள் இதற்கு என்ன பதில் சொல்கின்றன?

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி திராவிட இயக்கக் கொள்கைகளை, லட்சியங்களை கூர்தீட்டிக் கொள்ளப் பயன்படும்.

தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வியால் திமுகவின் வலிமை மேலும் பெருகும். கொள்கைகளுக்காகவும், லட்சியங்களுக்காவும் பாடுபடும் இயக்கம் திமுக.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

திருவாரூர் மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கு. தென்னன், நாகை மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர்கள் க. பொன்முடி, எ.வ. வேலு, உ. மதிவாணன், கே.என். நேரு, பரிதிஇளம்வழுதி, அழகு. திருநாவுக்கரசு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா, தலைமை தேர்தல் பணிக் குழுச் செயலர் எல். கணேசன் ஆகியோர் பேசினர்.

Add Comment