தூங்கி கொண்டிருந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வி.ஏ.ஓ. கைது

இளையான்குடியில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை, மானபங்கம் செய்ய முயன்ற, கிராம நிர்வாக அதிகாரி சுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது நெஞ்சத்தூர். இதன் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சுந்தரம். இவருக்கு வயது 56. இன்னும் 2 வருடங்களில் Buy cheap Levitra இவர் ஓய்வு பெறவுள்ளார்.

இந்த நிலையில், இவர், கடந்த மே 19 ம் தேதி, இரவு 11 மணிக்கு தனியாக படுத்திருந்த கமலா என்ற 32 வயது பெண்ணை அவரது வீட்டிற்குள் சென்று, மானபங்கம் செய்ய முயன்றார்.

இதனால் தூக்கத்தில் இருந்த கமலா அலறல் சத்தம் போடவே, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். கூட்டத்தை பார்த்ததும் வி.ஏ.ஓ. தப்பித்து ஓட முயன்றார். இருப்பினும் ஊர்மக்கள் ஒன்று கூடி சுந்தரத்தைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். பின்னர் கமலா தனக்கு நேர்ந்த மானபங்கம் குறித்து மாவட்ட எஸ்.பி, மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சிவகங்கை ஆர்.டி.ஓ. பொன்னையா, வி.ஏ.ஓ. சுந்ரத்தை சஸ்பெண்ட் செய்தார்.

Add Comment