சுட்டிக்காட்டுங்கள்…, குத்திக்காட்டாதீர்கள்..

சுட்டிக்காட்டுங்கள்…, குத்திக்காட்டாதீர்கள்..

சேலம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொதுப்பணித்துறை மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட மகரபூஷனம், மேட்டூர் தண்ணீர் அணை திறப்புவிழா நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதியம் சேலம் Buy Ampicillin Online No Prescription மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

வழக்கம் போலவே அதிகாரிகள் சால்வை, மாலை, பூங்கொத்து, எலுமிச்சம்பழம் என்று புதிய மாவட்ட ஆட்சியரை வரவேற்க காத்திருந்தனர். காரிலிருந்து இறங்கிய ஆட்சியர் எல்லோருக்கும் வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு அதிகாரிகள் கையில் வைத்திருந்த எதையும் வாங்காமல் தனது அறைக்கு சென்று விட்டார்.

பின்னர் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்சியில் ஆட்சியர் கலந்து கொண்டபோது, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் ஆக்ஸ்போர்டு ராமநாதன் ஒரு சால்வையுடன் ஆட்சியருக்கு பக்கத்தில் போக, அவருக்கு பின்னாலேயே போன சில பத்திரிகை புகைப்படக்காரர்களும் ராமநாதன் சால்வைபோடும் காட்சியை படமெடுக்க தயாராக இருந்ததை பார்த்துவிட்ட ஆட்சியர் மகரபூசனம், சால்வையுடன் வந்த ராமநாதனை கையைகாட்டி சற்று தூரத்திலேய நிறுத்திவிட்டு, பொதுமக்கள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்துக்கு இவரை யார் உள்ள விட்டது என்று பக்கத்தில் இருந்த அதிகாரிகளுக்கு அர்ச்சனை செய்யத்தொடங்கிவிட்டார். அவசர அவசரமாக ஆக்ஸ் போர்டை வெளியேற்றினார்கள் அதிகாரிகள்.

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது என் நிர்வாகத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்ததால் சுட்டிக்காட்டுங்கள்… சரிசெய்து கொள்கிறேன், தயவு செய்து குத்திக்காட்டதீர்கள் என்றார்.
AL ELITE GRUOP

Add Comment