இந்தியர்கள் ஏமனிலிருந்து உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியர்கள் ஏமனிலிருந்து உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்

கடந்த சிலமாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளார்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். கடந்த வாரம் ஏமன் அதிபர் சாலேஹ் மருத்துவ சிகிச்சைக்காக சவூதி Buy Bactrim அரேபியாவுக்குச் சென்றுள்ள நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்துக்குமிடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

ஏமனில் பணிபுரியும் 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உடனடியாக ஏமனை விட்டு வெளியேறும்படி மத்திய அய்லுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.ஏமன் தலைநகர் சனாவிலுள்ள இந்திய தூதரகத்தை நாடும்படி அங்கிருக்கும் இந்தியர்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்திய தூதரகத்தை அணுகுவதற்கு வதியாக 24 மணிநேர அவசரத் தொடர்பு எண்களையும் வெளியிட்டுள்ளது.

உள்நாடு மட்டும்: +967 711 880 938; அனைத்து அழைப்புகளுக்கும் +967 734 000 657. மேலும் +967 711 880 938 என்ற எண்ணுக்கு தொலைநகல் எழுதியோ அல்லது helpline@eoisanaa.com என்ற மின்மடல் மூலமாகவும் இந்திய தூதரகத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனிலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் ஜூன்-11 முதல் தொடங்கப்படுமென்று மத்திய அயலுறவுத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மே-27 மற்றும் ஜூன்-5 ஆகிய தேதிகளில் வெளியான எச்சரிக்கையில் ஏமன் நாட்டைவிட்டு வெளியேறும்வரை அங்கிருக்கும் இந்தியர்கள் வெளியிடங்களில் நடமாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த 15 நாட்களுக்குள் வெளியாகும் மூன்றாவது எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment