தாஜ்மஹால் (பீ.எம். கமால், கடையநல்லூர்)

சலவைக் கல்லில்
ஒரு
சாகாத காதல் கவிதை !

துன்பம் வந்த வேளையில்
துள்ளிவந்த சிரிப்பு !

காதல் இதயம்
சிந்திய
கண்ணீர்த் துளி !

இது-
சலவைக் கல் அல்ல –
காதலை எடைபோடும்
எடைக்கல் !

காதலியின் கண்ணீரால்
இந்தக்
கல்லுக்குள் ஈரம்
கசிந்துகொண்டிருக்கிறது !

Buy Levitra justify;”>இந்தச்
சலவை மௌனத்தில்
கேட்பது
உயிரின் ஓசையா ?
உறவின் ஓசையா ?

இது-
கல்லறை அல்ல !-
கட்டளை !
என்னை நீமட்டுமல்ல
எல்லோரும் எப்போதும்
நினைத்திருக்க வேண்டுமென்ற
அரசிக் கட்டளை !

Add Comment