பீகாரை ஆட்சி புரிவதில் பாஜகவின் ஒத்துழைப்பை நிதீஷ் மறக்கக் கூடாது-அத்வானி

15 ஆண்டு கால அலங்கோல ஆட்சியில் சிக்கியிருந்த பீகாரை, சிறந்த நல்லாட்சி நடக்கும் மாநிலமாக மாற்றியதில், நிதீஷ் குமாருக்கு பாஜக அளித்த ஒத்துழைப்பை அவர் மறந்து விடக்கூடாது என்று மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

பாட்னாவில் நேற்று முடிந்த தேசிய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அத்வானி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்தியில்,தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வகித்தபோது அதில் ரயில்வே அமைச்சராக செயல்பட்டதை நிதீஷ் குமார் மறந்து விடக் கூடாது.

அதேபோல 15 ஆண்டு காலமாக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இருந்த பீகாரை, அவர்களிடமிருந்து மீட்டு, இன்று காணப்படும் மிகச் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலமாக மாற்றியதில் நிதீஷ்குமாருக்கு பாஜக தந்த ஒத்துழைப்பை அவர் ஒருபோதும் மறந்து விடக் கூடாது என்றார்.

Buy cheap Ampicillin style=”text-align: justify;”>நரேந்திர மோடி அரசு வெளியிட்ட விளம்பர சர்ச்சையால் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் அத்வானியின் பேச்சால் அதிகமாகும் என்று கருதப்படுகிறது.

Add Comment