சுருதி வந்து சேருகின்ற காலம் (பீ.எம். கமால், கடையநல்லூர்)

பேசவறி யாமல் மண்ணில் பிறந்ததுமே அழுகின்ற
பிள்ளை மனம் பெறுவதுவே ஞானம்-அது
இல்லையெனில் உள்ளம்பெறும் ஊனம் !

வாசலறி யாமல் தினம் வந்துவந்து மோதுகின்ற
எண்ணம் “ஒன்றில்” ஒன்றுவது ஞானம்-அதை
ஏந்துகின்ற இதயமதே ஏனம் !

தன்னுடலை மறந்துநிதம் தனிமையிலே ஏங்கி ஒளி
தன்னுளத்தில் ஏந்துவதே ஞானம்-அதில்
தழைத்து வரும் இன்பசுக மோனம் !

கண்ணுடலில் இருப்பதுபோல் கள்ளமற்ற உள்ளமதில்
கண்ணொன்று விழிப்பதுவே ஞானம்-அது
காட்டிவிடும் ஏழேழு வானம் !

வான்மழையைப் போல்சுத்த மோடுஇந்தப் பூமியிலே
வாழவைக்கும் பேரிறைவன் ஞானம் -அது
வழங்குவதோ போதைமிக்க பானம் !
“நான்” மறைந்து நாயனவன் நல்லியல்போ டொன்ரிணைய
நல்ல வழி தருவதுவே ஞானம்!- அது
நம்மிடத்தில் இல்லையெனில் ஈனம் !
பட்டகாலிலே பட்டுப் பட்டுமனம் புண்ணாகி
பதைபதைக்கும் போதுவரும் ஞானம்-அது
பசும் மனத்தின் ஆனந்ததாளம்!
தொட்டவுடன் எல்லாமே துன்பமென வந்தவுடன்
தூசு உலகென்றரியும் ஞானம் ! -அது
தொல்லுலகில் அனுபவத்தின் பாடம் !
கிட்டவொரு பகையிருந்தும் கேடுவரு மென்றரிந்தும்
கெடுதி செய்யச் சொல்லாது ஞானம் !-அது
கிடைத்து விடில் வரும் கையில் ஞாலம் !
விட்டகன்று போனதையே விரக்தியுடன் எண்ணாது
விட்டுவிடும் பக்குவமே ஞானம் !-அதில்
வெற்றிசென்று கொள்ளும் நிலைத்தானம் !
முள்ளென் றறிந்திருந்தும் மூடுபனி மேலிருக்கக
கண்டதுமே புகழுவதும் ஞானம்- அது
கர்த்தனருள் சூழுகின்ற கோலம் !
சுள்ளென் றேசுட்டு சுட்ட இடம் காயம் பட்டால்
சுகமென்று Buy cheap Levitra சொல்லுவதும் ஞானம் !-அது
சுருதி வந்து சேருகின்ற காலம் !

Add Comment