கடையநல்லூரை திரும்பிப்பார்க்குமா தமிழக அரசு !

கடையநல்லூரை திரும்பிப்பார்க்குமா தமிழக அரசு!
தமிழகஅரசே!தமிழகஅரசே! தமிழகஅரசே!
நெல்லை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஊரான கடையநல்லூர் அதிகமான , மிகவும் நெருக்கடியான மக்கள் வாழும் ஊர் இது . இங்கு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கொடிய தொற்றுநோய்கள் மற்றும் உயிர் கொல்லி நோய்கள் ஆங்காங்கே சில பகுதிகளை பாதிக்கவும், சில சமயங்களில் ஊர் முழுக்கவும் பரவும் அபாயகரமான நிகழ்வுகளும் இருந்து வருவதற்கு காரணம் என்ன என்று பார்த்தால்:

1. ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக்கிடப்பது
2. இக்பால் நகருக்கு மேற்கே உள்ள தெப்பக்குளம் குப்பைக்கூடமாகி
மிகக்கொடிய கொசுக்களின் கூடாரமாக உள்ளது .
3.அட்டகுளதெரு மேற்கே உள்ள ஊரானிகுளம் இதுவும் கொசுக்களின்
புகலிடமாக உள்ளது .
4. பூக்கடை பஜார்
5.அரசு மருத்துவமனை அருகில் குப்பைகள் தேங்கிக்கிடப்பது
6.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் குப்பைகள் தேங்கிக்கிடப்பது
இதற்க்கு முக்கிய காரணம் போதுமான குப்பைத்தொட்டிகள் இல்லாததும் .
பொதுமக்கள் மக்கள் அங்காங்கே குப்பைகளை கொட்டுவதும் .
தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளே ! நகர சுகாதாரத்துறை அதிகாரிகளே !
கடையநல்லூர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் !
இக்பால் நகர் ,தெப்பக்குளம் அருகில்,ஊரானிகுளம் அருகில்,பூக்கடை பஜார் , அரசு மருத்துவமனை அருகில் ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் , மேலக்கடையநல்லூர்,கிருஷ்ணாபுரம் உள்ளடக்கிய அனைத்து பகுதிகளுக்கும் தினமும் எடுத்து செல்லக்கூடிய மிகப்பெரிய குப்பைத்தொட்டிகள் அமைக்க வேண்டும் .இதற்க்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் .தெப்பக்குளம்,ஊரானிகுளம்,அட்டகுளம் ஆகிய குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும் .எனவும் எங்களின் சார்பாகவும் ,பொதுமக்களின் சார்பாகவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் .இனிவரும் காலங்களில் பொதுமக்களே நமது பகுதிகளை சுகாதாரமக்கி ,நோய் இல்லாத வாழ்க்கை வாழ buy Viagra online பொறுப்போடு செயல்படுமாறும் பொதுமக்களையும்கேட்டுக்கொள்கிறோம் .

ALELITE GROUP ASS KDNL

Add Comment