தயாநிதியை பதவி விலக இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் வலியுறுத்தல்

“ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மத்திய அமைச்சர் தயாநிதி பதவி விலக வேண்டும்’ என்று, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் கூறினார்.
அவர் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு, இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் நீக்கம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்பு நிலங்களை கையகப்படுத்தி முஸ்லிம்களிடம் மீண்டும் ஒப்படைக்கக் கோரினோம். இது சம்பந்தமான அறிக்கை, கவர்னர் உரையில் இடம் பெறவில்லை. இது மனவருத்தத்தை அளித்தாலும், அதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெ., விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.

முதல்வராக ஜெ., பொறுப்பேற்ற பின், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் online pharmacy without prescription கொண்டு வரப்பட்டு சீராக்கப்பட்டுள்ளது. நாட்டில், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். கறுப்புப் பணம் மீட்கப்பட வேண்டும் என்பதை வரவேற்கிறோம். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், “ஸ்பெக்ட்ரம்’ ஊழலை ரகசியமாக வெளியே கொண்டு வந்தவர் தயாநிதி. அவரால் செய்யப்பட்ட சதி, தற்போது அவருக்கு எதிராக திசை மாறி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். ஆகவே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, ஊழல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு எஸ்.எம்.பாக்கர் கூறினார்.

நன்றி; தினமலர்

Add Comment