ஆயுதம் ஏந்துவோம் என்று கூறியதன் மூலம் ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது

ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகப் போராடுவோம் என்று கூறியுள்ளார் ராம்தேவ். இதன் மூலம் அவரது உண்மையான நிறம் வெளுத்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ராம்தேவ் பேசியதை நானும் அறிவேன். இப்படி பேசியுள்ளதன் மூலம் தனது உண்மையான நோக்கத்தையும், நிறத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் சொன்னதைச் செய்யட்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும்.

ராம்தேவை மீ்ண்டும் டெல்லிக்குள் அனுமதிப்பது குறித்து காவல்துறையின் ஆலோசனை பெறப்படும்.

பிரச்சினைக்கு முக்கியக் காரணமே ராம்தேவ்தான். அவர் முதலில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் பின்னர் அதிலிருந்து பல்டி அடித்தார். இதனால்தான் காவல்துறையும், அரசும் நடவடிக்கையில் இறங்க நேரிட்டது.

ராம்தேவை மிகவும் மதித்து அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தியது. Bactrim online ஆனால் தான் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் அக்கறையே காட்டவில்லை.

யோகா முகாம் நடத்தத்தான் முதலில் ராம்தேவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு கிட்டத்தட்ட 65,000 பேர் வரை கூடினார்கள். அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் இளைஞர் அணியினர், ஏபிவிபி தொண்டர்கள் முழு ஆதரவு கொடுத்தனர். இவர்கள்தான் பெருமளவில் திரண்டிருந்தனர்.

ராம்லீலா மைதானத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டெல்லி காவல்துறை விரைவில் விளக்கம் அளிக்கும். தனது விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டில் அது தெரிவிக்கும் என்றார் ப.சிதம்பரம்

Add Comment