துபாயில் தலைமறைவான கீழக்கரை வாலிபர் சுல்தான் அஹமது காசிம்

Ampicillin online height=”120″ />துபாயில் வேலை பார்க்க வந்த சில மாதத்திலேயே வேலை பிடிக்கவில்லை என்று கூறி விட்டு தலைமறைவான நபர், துபாயிலேயே தலைமறைவாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரை நம்பி கீழக்கரையில் வசித்து வரும் அவரது அப்பாவித் தந்தையும், தங்கையும், அந்த நபர் திரும்பி வர மாட்டாரா என்ற பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

அவரது பெயர் எச். சுல்தான் அஹமது காசிம். 29 வயதாகிறது. துபாயில் உள்ள ஈடிஏ நிறுவனத்தில் ஒர்க்கர் பணியில் 3 வருடத்திற்கு முன்பு சேர்ந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

தனக்கு வேலை பிடிக்கவில்லை என்றும், ஊருக்குப் போகப் போவதாகவும் சக ஊழியர்களிடம் கூறியிருந்தாராம். இதை தனது தந்தைக்கும் கூறியுள்ளார். ஆனால், பெருமளவில் பணத்தை செலவு செய்து அனுப்பியுள்ளோம், அது திரும்பக் கிடைக்கும் வரையாவது வேலை பார் என்று அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டு துபாயிலேயே இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அதன் பின்னர் சுல்தான் அஹமது பெற்றோரைத் தொடர்பு கொள்ளவில்லை.

மாறாக தற்போது சோனப்பூர், அல்கூஸ், ஜபேல் அலி போன்ற கேம்புகளில் உலாவி வருவதாகவும், அஜ்மானில் உள்ள சில குதிரைக்கு புல் போடும் இடத்திலும் சுற்றி வருவதாக தகவல்கள் வருகின்றன.

இவர் வீட்டிற்கு தொடர்பு கொள்வதோ, பணம் அனுப்புவதோ கிடையாது, இவரை எப்படியாவது தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்படி துபாயில் வசிக்கும் பல பேர்களை அணுகியும் யாரும் உதவி செய்யவில்லை என்று வருத்ததுடன் இவரது தாய் தந்தையர் தெரிவிக்கிறார்கள்.

நிறுவனத்தை அணுகி விசாரித்ததில் இவரை கொண்டு வந்தால் போதும் பயணச் சீட்டு எடுத்து ஊருக்கு அனுப்பிவிடலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

எனவே சுல்தான் அஹமதை யாரேனும் எங்காவது பார்த்தால், கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்.

துபாய்- முஜிப் : 050 -8660154

பாலா- 050 -2120277

சுல்தானின் பெற்றோரைத் தொடர்பு கொள்ள:

S.ஹமீது இப்ராஹீம்

நூர்ஜஹான் எலெக்ட்ரிகல்ஸ்

கீழக்கரை

போன்: 00914567 – 244640

செல்போன்: 0091 -9382293637

Add Comment