சென்கொடியே ! காத்திருக்கிறேன் !

தோற்ரோடிப்போய் காயமாற்ரி  வந்திருப்பதாய் கற்பனை செய்து கொண்டிருக்கும் சென்கொடிக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள் !
உங்கள் கட்டுரைகளை பதிலுரைகளைப் படித்தபோது எனக்கு கீழ் கண்ட திருமறையின் வாசகங்கள்
நினைவுக்கு வந்தன :
“நிச்சயமாக மனிதர்களிலும் ஜின்களிலும் அநேகரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம்
(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக்கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும் அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள அத்த்தாட்சிகளை ) அவர்கள் பார்க்கமாட்டார்கள் ; அவர்களுக்கு செவிகளுண்டு ; எனினும் அவற்றைக்கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்குச்)  செவிசாய்க்க மாட்டார்கள்; இத்தகையோர் மிருகங்களைப்போல் இருக்கின்றனர் —அல்ல- — அவற்றைவிட அதிகமாக வழி கெட்டவர்களாகவே  இருக்கின்றனர் !
இத்தகையோர்தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவர்! (அத்தியாயம் -7  ஆயத்-179 )
அதுமட்டுமல்ல ! பைபிளிலிருந்தும்   வாசித்த  ஒரு வாசகம்  வந்துபோனது என் நினைவில் !
” பரிசுத்தமானதை நாய்களுக்கு கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களை பன்றிகள் முன் போடாதேயுங்கள் ; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்! (மத்தேயு 7 : 6 )
இதனை வேறு விதமாகவும் சொல்வார்கள் ! ” பன்றிகளின் முன்னால் முத்துக்களைப் பரப்பாதீர்கள்; (ஏனெனில்) பன்றிகள் முத்துக்களின் தராதரத்தை அறியமாட்டா” என்று.
ஆணாதிக்கம் பற்றி செங்கொடி எழுப்பிய கேள்விக்கு பதிலுரை தந்த பின்னும் முறையாகப் பதிலுரைக்க நான் முன் வரவில்லை என்று பிதற்றிய போது எனக்கு பைபிளின் வாசகம் நினைவுக்கு வந்தது !
இஸ்லாத்திற்கு எதிராக மேற்கத்திய நாடுகளும் சியோனிசவாதிகளும் கிறித்துவர்களும் திட்டமிட்டு
இஸ்லாத்தின் பெயராலேயே வலைத்தளங்களில்  பரப்புரை செய்து வருகிறார்கள். அவற்றைப் படித்துவிட்டு ஏதோ ஆயிரம்  நூற்களைப் படித்து ஆராய்ச்சி செய்ததைப்போல  பொய்யான கருத்துக்களை இஸ்லாத்திற்கு எதிராக எழுதி வருகிறார்.
வாசக நேயர்களின் கருத்துப்படி செங்கொடி ஒரு முஸ்லிமுக்கு முஸ்லிமாகவே பிறந்து முர்தத் ஆனவர் என்பதை அறிகிறேன் ! அவர் சென்கொடியால் தன் முகத்தை Buy Cialis மறைப்பதை விட்டு விட்டு
தாய் தந்தை வைத்த தரமான பெயரால் – அவரின் கடவுச் சீட்டிலும்- இகாமாவிவிலும் இருக்கும் உண்மைப் பெயரில் – கேள்விகள் கேட்கலாம்- வாதம் செய்யலாம் வரவேற்கிறேன் !
சென்கொடியே ! சினம் கொண்டு சீறுவதை சிறிது நிறுத்தி விட்டு புறப்பட்டு வாருங்கள் ! காத்திருக்கிறேன் !
பி. எம். கமால்
கடையநல்லூர்

Add Comment