இந்திய விமானப்படை பணிக்கு ஆள் சேர்ப்பு

இந்திய விமானப்படைக்கு, ஜூலை 18ல் ஆள் சேர்ப்பு முகாம் சென்னையில் நடக்கிறது. 1990 ஜூலை 1 முதல் 1994 செப்டம்பர் 30 வரை பிறந்த, புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத இளைஞர்கள் பங்கேற்கலாம். குரூப் “ஒய்'(நான் டெக்னிக்கல்) பிரிவிற்கு, பிளஸ்-2 தேர்வில் அறிவியல், கலை அல்லது வணிகவியல் பாடங்களுடன் Buy Bactrim 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்குகளில், ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பில், குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குரூப் “எக்ஸ்'(டெக்னிக்கல் டிரேட்கள்), பிளஸ்-2 தேர்வில், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுகளில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தாம்பரத்தில் ஜூலை 18ல் ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. காலை 6 முதல் 10 மணிக்குள் பங்கேற்க வேண்டும். அசல் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு ஏழு புகைப்படங்கள், விளையாட்டு உடை, இருப்பிடச்சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

Add Comment