கடையநல்லூர் பகுதியில் எம்எல்ஏ.,நன்றி தெரிவிப்பு

கடையநல்லூர் தொகுதியில் எம்.எல்.ஏ.,செந்தூர்பாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கடையநல்லூர் தொகுதி கொடிக்குறிச்சி, சிவராமபேட்டை பகுதிகளில் நேற்று மாலை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து செந்தூர்பாண்டியன் எம்.எல்.ஏ., பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- “”சட்டசபை தேர்தலின் போது பணத்தை மட்டும் நம்பி திமுக தேர்தலை சந்தித்தது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்தித்தார். அந்த நம்பிக்கையை வெற்றியடைய செய்யும் வகையில் தமிழக மக்கள் அதிமுகவிற்கு அதிகளவில் ஆதரவினையும் தந்து, ஆட்சி பொறுப்பினையும் தந்துள்ளனர். முதல்வராக பொறுப்பேற்றவுடன் முத்தான 7 திட்டங்களுக்கு உத்தரவிட்டு முதல்வர் கையெழுத்திட்டார். திமுகவை பொறுத்தவரை தற்போது கட்சி தலைமை முதல் அனைவரும் பயத்தில் மட்டும்தான் உள்ளனர். கடந்த 5 ஆண்டு காலத்தில் இலவச கலர் “டிவி’ திட்டத்தின் மூலமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை குடும்ப நலனுக்காக கருணாநிதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக மக்களை ஏமாற்றி இந்த வருமானத்தை கருணாநிதியும், அவரது குடும்பமும் மேற்கொண்டுள்ளன. சுய, சொந்த நலனுக்காகவும், குடும்பத்திற்காகவும் மட்டுமே கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய கருணாநிதியை தமிழக மக்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள். தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் தற்போது நிம்மதியாக வாழும் சூழ்நிலை காணப்பட்டு வருகிறது” என்றார். எம்.எல்.ஏ.,வுடன் மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் Buy Amoxil Online No Prescription மூர்த்தி, தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, பேரவை செயலாளர் பெரியதுரை, முன்னாள் யூனியன் கவுன்சிலர் சரவணன், கொடிக்குறிச்சி பரமசிவன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சண்முகவேல், ஒன்றிய இளைஞரணி செயலாளர் லெட்சுமணன், கிளை செயலாளர்கள் மாரித்துரை, வேல்சாமி, மாநில பேச்சாளர் தீக்கனல் லட்சுமணன், எம்.எல்.ஏ., உதவியாளர் குருசாமி, செங்கோட்டை குட்டியப்பா, பஞ்., செயலாளர் ஆறுமுகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Add Comment