தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம்-நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி அறிவிப்பு

6,400 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணத்தை நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி இன்று வெளியிட்டது.

இந்த கட்டண விவரம் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் கட்டண விகிதத்தை வழங்குவார். மேலும் பள்ளிக் கட்டண முழு விவரமும் பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. கட்டண விபரம் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் புதிய கட்டணம் பொருந்தும். அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் அறிவிக்கப்படவில்லை. அங்கீகாரம் பெற்ற பிறகு புதிய கட்டணம் அப்பள்ளிகளுக்கு பொருந்தும்.

மூன்று ஆண்டுகளுக்கு

கல்வி கட்டணம் குறித்து தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி விபரம் no prescription online pharmacy அறியலாம் என, நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு சென்னையில் விளக்கம் அளித்தது.

புதிய கட்டணங்கள் 2010-11, 2011-12, 2012-13 கல்வியாண்டுகளுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புகார்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அரசுக்கு புகார் சென்றது. இதைத்தொடர்ந்து கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

அந்த கமிட்டி ஒவ்வொரு பள்ளிக்கும் தனி கட்டணம் நிர்ணயித்து வெளியிட்டது. ஆனால் அந்த கட்டணம் போதாது என்று கூறி 6,400 பள்ளிகள் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தன.

நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு

இதைத்தொடர்ந்து அந்த பள்ளிகளுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார். அவர் மாவட்டம் வாரியாக பள்ளிகளை அழைத்து பள்ளிகளின் விவரங்களை கேட்டறிந்தார். நேர்முக கேட்பு 15.11.2010 முதல் 4.5.2011 வரை நடைபெற்றது.

ஒவ்வொரு பள்ளியும் அளித்த விவரங்கள் மேல்முறையீடு செய்த போது அளித்த விவரங்கள் நேர்முக கேட்பின்போது அளித்த விவரங்கள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து தணிக்கையாளர்களின் தணிக்கைக்கு உட்படுத்தி மீண்டும் சரிபார்த்து இறுதி ஆணைகள் (புதிய கட்டணம்) தயாரிக்கப்பட்டுள்ளன.

ரவிராஜ பாண்டியன் விலகல்

காலையில் கட்டணப் பட்டியல் வெளியான நிலையில் மாலையில் ரவிராஜ பாண்டியன் தனது பொறுப்பிலிருந்து விலகி விட்டார். தனது விலகல் கடிதத்தை அவர் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Add Comment