ஒன்றும் புரியவில்லை!

ஒன்றும் புரியவில்லை!

இலவசம்! இலவசம்! இலவசம்! நாட்டில் நிதியாறு வெள்ளமெனப் பாய்கின்றதோ!

பார்க்கும் பொழுது, கேட்கும் பொழுது உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கின்றது!

செல்வம் மிகுந்த நாடு தமிழ்நாடு எனக் கூவத் Levitra No Prescription துடிக்கின்றது.

ஓனால் ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை.

ஒருபுறம் இலவசங்கள்! மறுபுறம். . . . .

நடுவீதிகளில் கைகளில் மழலைகளை ஏந்தியவாறு வறுமைப் பெண்கள் . . . . கண்களில் ஏக்கத்துடன் அழுக்குப் படிந்த ஆடையுடன் பிச்சை கேட்கும் சிறுவர்கள் . . . . தெருவோரங்களில் ஆடையின்றிப் படுத்து உழலும் அழுக்கு மனிதர்கள் . . . . இன்னும் வறுமையினால் கல்வி மறுக்கப்பட்டு உணவு விடுதிகளில் மேசையைத் துடைக்கும் பையன்கள் . . . .இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே மனிதர்கள் . . . .

ஏன் இந்த முரண்பாடு?

என்று மறையும் வறுமைச் சின்னங்கள்?

ஒன்றும் புரியவில்லை!

– மதி அபியா

Add Comment